புதுடெல்லி: கால்நடைகளின் கோமியம் பாக்டீரியா எதிர்ப்பு சக்தி என்ற நம்பிக்கையை பொதுமைப்படுத்த முடியாது என உத்தரப்பிரதேச மாநிலத்தின் கால்நடை ஆராய்ச்சி மைய ஆய்வில் தெரியவந்துள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் இசாத்நகர் பகுதியில் உள்ள இந்திய கால்நடை ஆராய்ச்சி மையத்தின் தொற்றுநோயியல் துறையின் சார்பில் பசுக்கள், எருமைகள் மற்றும் மனிதர்களின் சிறுநீரில் பாக்டீரியா மற்றும் ஒப்பீட்டு நுண்ணுயிர் எதிர்ப்பு செயல்திறன் உள்ளதா என்று ஆய்வு செய்யப்பட்டது.
73 மாதிரிகள் ஆய்வு: 19 மனிதர்களின் சிறுநீர் மாதிரிகள், முர்ரா எருமை, புபாலஸ் புபாலிஸ் 13; சாஹிவால் கால்நடை, பாஸ் இண்டிகஸ் 11; தார்பர்கர் கால்நடை, பாஸ் இண்டிகஸ் 18; பிருந்தாவானி கால்நடை, பாஸ் இண்டிகஸ் மற்றும் பாஸ் டாரஸ் 12 ஆகியவற்றின் கலப்பின இனம் உள்ளிட்ட பசுக்கள், எருமைகள் உள்ளிட்ட 73 சிறுநீர் மாதிரிகள் ஆகியவை ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. மருத்துவ பாக்டீரியாவியல் முறைகளைக் கொண்டு பாக்டீரியா ஆய்வு மூலம் 73 மாதிரிகளில் பாக்டீரியா எதிர்ப்பு செயல்பாடு உள்ளதா? என்று ஆய்வு செய்யப்பட்டது. சிறுநீர் மாதிரிகளில் தீங்கு விளைவிக்கும் 14 பாக்டீரியாக்கள் இருப்பது தெரிய வந்தது. எஸ்கெரிச்சியா கோலி என்ற கிருமி 13 மாதிரிகளில் இருப்பதும் கண்டறியப்பட்டது.
இதையும் படிங்க: இந்தியா - இங்கிலாந்து டி20 போட்டியை பார்க்க வருபவர்கள் மெட்ரோவில் இலவசமாக பயணிக்கலாம்!
மேலும், ஹஃப்னியா அல்வி 11 மாதிரிகளிலும், ஸ்டேஃபிளோகோகஸ் எபிடெர்மிடிஸ் 8 மாதிரிகளிலும், பேசிலஸ் மைக்காய்டுகள் 7 மாதிரிகளிலும், புரோட்டியஸ் மிராபிலிஸ் 5 மாதிரிகளிலும், என்டோரோகோகஸ்பேசியம் 4 மாதிரிகளிலும் , அசினிடோபாக்டர் கால்கோஅசெட்டிகஸ் 3 மாதிரிகளிலும், என்டோரோகோகஸ் ஃபேகாலிஸ் 3 மாதிரிகளிலும், பேனிபாகிலஸ்பாண்டோதென்டிக் 3 மாதிரிகளிலும், சால்மோனெல்லா என்டெரிகா எஸ்எஸ்பி.enterica Ser Enteritidis 3 மாதிரிகளிலும், Klebsiella நிமோனியாஎஸ்பி.நிமோனியா 2 மாதிரிகளிலும், Pantoea agglomerans 2 மாதிரிகளிலும், எர்வினியா ரபோன்டிசி 1மாதிரியிலும், மற்றும் Providencia rettgeri 1மாதிரியிலும் இருப்பது தெரியவந்தது.
பொதுமைப்படுத்த முடியாது: எருமை மாடுகளின் சிறுநீர் மாதிரிகளில் பெரும்பாலும் ஏ. சைலோக்ஸிடான்கள் செயல்பாடுகளைக் கொண்டதாக இருந்தன. இவை சுவாசத்தொற்றுகளை ஏற்படுத்தக் கூடியவையாகும். ஆரோக்கியமான நபர்களிடமிருந்து பெறப்படும் சிறுநீர் மாதிரிகளில் கணிசமான அளவு பாக்டீரியாக்களைக் கொண்டிருப்பதாக ஆய்வு முடிவின் மூலம் தெரியவந்துள்ளது. ஆனால் புனிதமாக கருதப்படும் பசுக்களின் கோமியம் பாக்டீரியா எதிர்ப்பு சக்தி கொண்டது என்ற நம்பிக்கையை பொதுமைப்படுத்த முடியாது. எந்தவொரு சந்தர்ப்பத்திலும், பசுக்களின் சிறுநீரை மனித நுகர்வுக்கு பரிந்துரைக்க முடியாது எனக் கூறப்பட்டுள்ளது.
இந்த ஆய்வு முடிவு 2022ஆம் ஆண்டு நவம்பர் 3ஆம் தேதி இந்திய கால்நடை ஆராய்ச்சி மையத்தின் தொற்றுநோயியல் துறையால் பெறப்பட்டன. அதே ஆண்டு நவம்பர் 16ஆம் தேதி இந்த ஆய்வு முடிவு இந்த நிறுவனத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இந்த ஆய்வு முடிவு 2022ஆம் ஆண்டு நவம்பர் 22ஆம் தேதி இணையதளத்தில் வெளியிடப்பட்டது.