ETV Bharat / state

நா.த.க. காளியம்மாள் திமுக-வில் இணைய உள்ளாரா? - அமைச்சர் சேகர்பாபு பதில்! - MINISTER PK SEKAR BABU

நாம் தமிழர் கட்சியில் இருந்த காளியம்மாள் திமுகவிற்கு வருவதாக இருந்தால் அவரை ஏற்பது குறித்து தமிழக முதலமைச்சர் முடிவு எடுப்பார் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

அமைச்சர் சேகர் பாபு
அமைச்சர் சேகர் பாபு (@PKSekarbabu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 23, 2025, 8:56 PM IST

சென்னை: பல்லாயிரம் கோடி ரூபாய் நிதியை மத்திய அரசு நிறுத்தினாலும், எங்கள் ஆட்சியின் பணி தொடரும் என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 72-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் மக்கள் முதலமைச்சரின் மனிதநேய விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதில், ஆண்டு முழுவதும் ஏழை, எளிய பொதுமக்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, சென்னை கிழக்கு மாவட்டம் திமுக சார்பில் மண்ணடி மற்றும் காமராஜர் சாலையில் உள்ள அன்னை சத்யா நகரில் உள்ள ஏழை எளிய பொதுமக்களுக்கு, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும், சென்னை கிழக்கு மாவட்ட செயலாளருமான பி.கே.சேகர் பாபு காலை உணவுகளை வழங்கியுள்ளார்.

பின்னர், அமைச்சர் சேகர் பாபு செய்தியாளர்களைச் சந்தித்துள்ளார். அப்போது, ஈஷா யோகா மையத்தில் சிவராத்திரி நேரத்தில் வனசூழல் பாதிக்கப்படுகிறது. அதனை இந்து சமய அறநிலையத் துறை கண்காணிக்க வேண்டும் என்று வழக்கு தொடரப்பட்டுள்ளது குறித்த கேள்விக்கு, “இந்த ஆட்சி நீதி தேவதையின் ஆட்சி. நீதியின் ஆட்சி; சட்டத்தின் ஆட்சி. நீதிமன்றம் என்ன வழிகாட்டுகிறதோ அதனை முதலமைச்சர் நிறைவேற்ற கட்டளை இடுவார். நீதிமன்றம் சுட்டிக்காட்டும் திசையை நோக்கி எங்கள் பயணம் அமையும்” என்றார்.

நாம் தமிழர் கட்சி காளியம்மாள் திமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது குறித்த கேள்விக்கு, “நாம் தமிழர் கட்சி காளியம்மாள் திமுகவிற்கு வருவதாக இருந்தால் அவரை ஏற்பது குறித்து தமிழக முதலமைச்சர் முடிவு எடுப்பார்” என்றார்.

இதையும் படிங்க: நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகுகிறாரா காளியம்மாள்? அழைப்பிதழால் ஏற்பட்டுள்ள சர்ச்சை!

தமிழ்நாட்டிற்கு நியாயமாக வழங்க வேண்டிய கல்விக்கான தொகையை வழங்க மத்திய அரசு மறுக்கிறது. கடந்த காலங்களில் ஏற்பட்டிருந்த நிர்வாக சீர்கேடுகளை கலைத்து, பல்லாயிரம் கோடி ரூபாயை மத்திய அரசு நிறுத்தினாலும் எஙகள் ஆட்சியின் பணி தொடரும். இருமொழிக் கொள்கையில் உறுதியாக இருப்போம், மும்மொழிக் கொள்கையை தமிழ்நாட்டில் அனுமதிக்கமாட்டோம் என்பதில் முதலமைச்சர் உறுதியாக இருக்கிறார்.

அதிமுக ஆட்சியில் எத்தனை வெள்ளை அறிக்கைகளை ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டார். இந்த ஆட்சி வெளிப்படைதன்மை மிக்க ஆட்சி. அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள் மட்டுமில்லாமல், அறிவிக்கப்படாத திட்டங்களாலும் பல கோடி மக்கள் பயனடைந்துள்ளனர்” என்றார்.

இந்து சமய அறநிலையத் துறை பெயரை மாற்ற வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை கூறிய கருத்துக்கு பதில் அளித்த அமைச்சர் சேகர் பாபு, “அறிவுரைகள், குறைகள் அலசி ஆராயப்படும். வாய்ப்பு இருந்தால், அதற்கேற்றாற்போல் தமிழ்நாடு முதலமைச்சர் முடிவு எடுப்பார்” என்றார்.

முன்னதாக, தூத்துக்குடியில் நடைபெற உள்ள ஒரு நிகழ்ச்சிக்காக அச்சிடப்பட்டுள்ள அழைப்பிதழில் காளியம்மாள் பெயரும் இடம் பெற்றுள்ளது. அதில், நாம் தமிழர் கட்சியின் மாநில மகளிர் பாசறையின் ஒருங்கிணைப்பாளர் என இல்லாமல், சமூக செயற்பாட்டாளர் காளியம்மாள் என அச்சிடப்பட்டது. அந்த அழைப்பிதழ் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பேசுபொருளாக மாறியுள்ளது. இந்த நிலையில், அவர் நா.த.க.வில் இருந்து விலகி திமுக-வில் இணைய உள்ளாரா? என பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.