Actor manobala: மனோபாலா உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய நடிகர் விஜய், கவுண்டமணி - actor manobala
🎬 Watch Now: Feature Video
சென்னை: நடிகரும் இயக்குநருமான மனோபாலா இன்று காலை உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். அவரது உடலுக்கு நட்ராஜ் என்கிற நட்டி, சுசீந்திரன், மணிரத்னம், ஹெச்.வினோத், மோகன், தாமு உள்ளிட்ட திரைத் துறையினர் நேரில் அஞ்சலி செலுத்தினர். மேலும் மனோபாலா மறைவிற்கு ரஜினிகாந்த், கமல்ஹாசன், சத்யராஜ், பாரதிராஜா, இளையராஜா, கே.எஸ். ரவிக்குமார், ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பல்வேறு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் நடிகர் விஜய் மற்றும் கவுண்டமணி ஆகியோர் மனோபாலா உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி உள்ளனர். விஜய் மற்றும் மனோ பாலா இணைந்து துப்பாக்கி, தலைவா, நண்பன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளனர். மனோபாலாவின் உடல் நாளை காலை தகனம் செய்யப்படுகிறது.
இதையும் படிங்க: Chennai rains: தமிழ்நாட்டில் இயல்பு நிலையை விட 12 செ.மீ., வரை மழையின் அளவு அதிகரிப்பு - பாலச்சந்திரன்
மனோபாலா 'ஆகாய கங்கை' என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான மனோபாலா 40 திரைப்படங்களையும், 16 தொலைக்காட்சி தொடர்களையும் இயக்கியுள்ளார். மேலும் 200 படங்களுக்கும் மேல் நடித்துள்ளார்.
இதையும் படிங்க: Actor Manobala : நடிகர் மனோபாலா மறைவு - முதலமைச்சர், திரைப்பிரபலங்கள் இரங்கல்!