'உங்களை பாக்கணும்னு தோணுச்சு'-VJS-யிடம் கியூட்டாக பேசிய குழந்தை - விஜய் சேதுபதி காணொலி
🎬 Watch Now: Feature Video
சென்னை: தற்போது திரையுலகில் முன்னணி நடிகர்களின் பட்டியலில் இருக்கும் விஜய் சேதுபதி, ஒரு குழந்தையுடன் பேசும் காணொலி வைரலாகி வருகிறது. தென்மேற்கு பருவக்காற்று, பண்ணையாரும் பத்மினியும், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, நானும் ரவுடி தான், கவண் உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாகவும், விக்ரம், மாஸ்டர் போன்ற படங்களில் வில்லனாகவும் நடித்து ரசிகர்கள் மத்தியில் பாராட்டைக் குவித்தவர், விஜய் சேதுபதி.
இவர் தமிழ் மட்டுமன்றி தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிப் படங்களிலும் நடித்து வருகிறார். ஜீரோ பெர்சண்டெஜ் ஹேட்டர்ஸ் கொண்ட மக்கள் செல்வன் தற்போது மழலை மனம் வீசும் ஒரு குழந்தையுடன் பேசும் காணொலி இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த குழந்தை, ''உங்கள பாக்கணும்னு தோணுச்சு, அதான் வந்தேன்'' என்பதும், ''உடன்பிறந்தவர் தான் ஆயாம்மா'' என்றும்; பேசிய அந்தப் பிஞ்சு குழந்தையின் மழலை வார்த்தைகளை ரசித்து கேட்டும், குழந்தைக்கு சாக்லேட் கொடுத்தனுப்பிய விஜய் சேதுபதியின் வீடியோ ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று, சமூக வலைதளத்தில் லைக்குகளை அள்ளுகிறது.
இதையும் படிங்க: தமிழ் பாட்டுக்கு யூனிபார்மில் டான்ஸ் ஆடிய கேரளா போலீஸ் சஸ்பெண்ட்: வைரலாகும் வீடியோ!