பல்லாவரம் சந்தையில் கீரிபிள்ளை முடியில் வண்ணத்தூரிகை.. வனத்துறை அதிரடி நடவடிக்கை! - painting brush

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : May 14, 2023, 12:28 PM IST

சென்னை: சென்னை தாம்பரம் கஸ்தூரி பாய் நகரைச் சேர்ந்தவர் முகமது ராவுத்தர்(63). இவர் பல்லாவரம் சந்தையில் கீரிப்பிள்ளை முடியால் செய்யப்பட்ட வண்ணத்தூரிகையை விற்பனை செய்து வந்துள்ளார். இது குறித்து தாம்பரம் வனச்சரக அலுவலர் வித்யாபதி அவர்களுக்கு தகவல் கிடைத்தது. 

பின்னர், பல்லாவரம் சந்தையில் ஆய்வு செய்ததில் கீரிபிள்ளையின் முடியால் வண்ணத்தூரிகை(painting brush) செய்து விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. அவரை கைது செய்த வனச்சரக அலுவலர் விற்பனைக்கு வைத்திருந்த கீரிப்பிள்ளை முடியால் ஆன வண்ணத்தூரிகையையும், அதனை ஏற்றி கொண்டு வந்த சரக்கு வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். 

பின்னர் விசாரணையில் மண்ணடி கிடங்கில் பதுக்கி வைத்துக் கொண்டு விற்பதாக வாக்குமூலம் அளித்ததின் பேரில் மண்ணடி கிடங்கிலிருந்தும் வண்ணத்தூரிகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. கீரிப்பிள்ளையின் முடி எங்கிருந்து கிடைத்து என கேட்டதற்கு, யாரோ ஒருவர் கொண்டு வந்து தருவதாகவும் கிடங்கில் வைத்து பல்லாவரம் சந்தையில் விற்பதாகவும் தெரிவித்துள்ளார். 

கைது செய்யப்பட்ட நபர் மீது 1972 வன உயிரின பாதுகாப்பு சட்டப்படி உரிமம் இல்லாமல் விலங்கு பொருட்களைக் கையாள்வது மற்றும் வர்த்தகம் செய்வது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கீரிப்பிள்ளையை வேட்டையாடி முடியை எடுத்தார்களா, அல்லது யார் கொடுத்து என வனத்துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: அடடே..! கீழடி அருங்காட்சியகத்தில் சைகை மொழியில் விளக்கம்.. அசத்திய மதுரை பெண்கள்!

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.