செங்கம் நீதிமன்றத்தில் குடிபோதையில் போலீசாரிடம் ரகளை செய்த நபரால் பரபரப்பு! - செங்கம் காவல்துறை
🎬 Watch Now: Feature Video
திருவண்ணாமலை: செங்கம் பகுதியைச் சேர்ந்த தினகரன் என்பவரைக் கடந்த 2017ஆம் ஆண்டு செங்கம் காவல்துறையினர் இருசக்கர வாகனத் திருட்டில் கைது செய்து செங்கம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு வழக்கு நடந்து வந்துள்ளது.
இருசக்கர வாகனத்திருட்டு வழக்கில் வாய்தாவுக்காக வந்திருந்த தினகரன் இன்று மது அருந்திவிட்டு நீதிமன்றத்தின் உள்ளேயே சரமாரியான கேள்விகளை எழுப்பி காவல் துறையினரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்பொழுது மது போதையில் இருந்த “திருட்டு வழக்கில் ஈடுபட்ட தினகரன். நான் திருடன் தான். உங்களால் முடிந்தால் என்ன செய்வீர்கள். செய்யுங்கள் முடிந்தால் என் நெஞ்சிலே சுடுங்கள்” என்று காவல்துறையினரை பார்த்து தகாத வார்த்தையை கூறியும் ரகளையில் ஈடுபட்டு வந்தார்.
இதுகுறித்து செங்கம் காவல்துறையினருக்குத் தகவல் அளித்த பின்னர் விரைந்து வந்த காவல் துறையினர் தினகரனை தர தர என இழுத்துச்சென்றனர். மேலும் செங்கம் காவல் துறையினர் மதுபோதையில் நீதிமன்றத்தில் ரகளையில் ஈடுபட்ட தினகரனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டும்: முதலமைச்சர்