'விக்குற அரசாங்கத்த விட்டுடுறீங்க... காய்கறி விலை கம்மி, சரக்கு விலை ஜாஸ்தி' - போலீசாரிடம் குடிமகன் கேள்வி - செங்கல்பட்டு மாவட்ட குற்றச் செய்திகள்
🎬 Watch Now: Feature Video
செங்கல்பட்டு: மதுராந்தகம் பஜார் பகுதியில் அரசு டாஸ்மாக் மதுபானக் கடை ஒன்று இயங்கி வருகிறது. இந்தக் கடையில் இன்று (பிப்.06) கடை திறந்தவுடன் குடிமகன் ஒருவர் வந்து மதுபானம் வாங்கி, அங்கேயே அமர்ந்து குடித்ததாக கூறப்படுகிறது. மேலும், பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் அங்கேயே திரிந்துள்ளார்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மதுராந்தகம் காவல் துறையினர், அவரை அங்கிருந்து செல்லுமாறு எச்சரித்தனர். ஆனால், அவர் காவல் துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். "மது விற்பனை செய்யும் அரசாங்கத்தைத் தட்டிக் கேட்காமல், வாங்கிக் குடிக்கும் எங்களைப் போன்றவர்களை மட்டும்தான் போலீசார் மிரட்டுவர். நான் என்ன தவறு செய்தேன்? என்னை ஏன் மிரட்டுகிறீர்கள்? காய்கறிகள் குறைவான விலையில் விற்கிறது. ஆனால், மதுபானம் அதிக விலைக்கு விற்கப்படுகிறது. இதையெல்லாம் காக்கிச்சட்டை போட்ட நீங்கள்தான் தட்டிக் கேட்க வேண்டும்'' என்றார்.
குடித்திருந்த அந்த நபரை எப்படிக் கையாள்வது என்று தெரியாமல் காவல் துறையினரும் திகைத்திருந்த நேரத்தில், சட்டென அங்கிருந்து நழுவினார் அந்தக் குடிமகன். இவரால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: பாலியல் பலாத்கார வழக்கு - திமுக பிரமுகரின் மகன் கைது!