வளைவில் அதிவேகம்... கட்டுப்பாட்டை இழந்த கார் மோதியதில் 3 பெண்கள் கோர பலி! - கார் மோதி 3 பெண்கள் பலி
🎬 Watch Now: Feature Video
ஐதராபாத் : நடைபயிற்சி சென்று கொண்டு இருந்த மூன்று பெண்கள் மீது கட்டுப்பாட்டை இழந்து தறிக்கெட்டு ஓடிய கார் வேகமாக மோதிய சம்பவத்தின் பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.
ஐதராபாத், சன் சிட்டி பந்தலகுடா பகுதியில் காலை வேளையில் தாய், மகள் உள்பட மூன்று பெண்கள் நடைபயிற்சி சென்று கொண்டு இருந்தனர். அப்போது அதிவேகமாக வளைவில் திரும்பிய கார் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தறிக்கெட்டு ஓடத் தொடங்கியது. வளைவில் சறுக்கிக் கொண்டு திரும்பிய கார், நடைபயிற்சி சென்று கொண்டு இருந்த மூன்று பெண்கள் மீது பலமாக மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் தாய், மகள் உள்பட மூன்று பெண்களும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து ஏற்படுத்திய கார் ஓட்டுநர் தலைமறைவானதாக போலீசார் தெரிவித்து உள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் தாய், மகள் உள்பட மூன்று பெண்களின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பினர்.
விபத்து ஏற்படுத்திய காரை பறிமுதல் செய்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்த போலீசார், தலைமறைவான கார் ஓட்டுநரையும் தேடி வருவதாக கூறினர். வளைவில் அதிவேகமாக வந்த கார் மோதியதில் மூன்று பெண்கள் பரிதாபமாக தூக்கி வீசப்பட்டு உயிரிழந்த சம்பவத்தின் பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி வேகமாக பரவி வருகிறது.
இதையும் படிங்க : "பயங்கரவாதத்திற்கு நிதியுதவியை நிறுத்துங்கள்" - ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் மோடி பேச்சு!