Video: கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் உலா வந்த மலர் அலங்காரங்கள்! - கொடைக்கானல் கோடை விழா
🎬 Watch Now: Feature Video
திண்டுக்கல்: கொடைக்கானலில் கோடை விழாவை முன்னிட்டு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று நட்சத்திர ஏரியில் படகு அலங்கார போட்டி நடைபெற்றது. இதைக் காவல் துணை கண்காணிப்பாளர் சீனிவாசன் கொடி அசைத்துத் துவங்கி வைத்தார். இப்போட்டியில் கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியம், சுற்றுலாத் துறை, தோட்டக்கலைத் துறை ஆகிய துறைகள் கலந்து கொண்டன.
இந்தப் போட்டியில் ஊராட்சி ஒன்றியம் சார்பில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், முதலமைச்சரின் கிராம சாலை திட்டம் மற்றும் பள்ளியின் உட்கட்டமைப்பை விளக்கும் விதமான உருவ மாதிரிகள் காட்சிப்படுத்தப்பட்டன. மேலும், சுற்றுலாத் துறை சார்பில் ஜல்லிக்கட்டு மாடு, தோட்டக்கலைத் துறை சார்பில் பூக்களால் ஆன ஸ்பைடர் மேன் உருவம், மீன்வளத்துறை சார்பில் மீன்வளத்துறையின் நலத்திட்டங்கள் குறித்துக் காட்சிப்படுத்தப்பட்டது.
இந்தப் போட்டியில் கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியம் முதலிடமும், சுற்றுலாத் துறை இரண்டாம் இடமும், தோட்டக்கலைத் துறை மூன்றாம் இடமும் பெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் இந்த நிகழ்ச்சியில் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.