ஶ்ரீரங்கம் கோயில் உண்டியல் காணிக்கை வசூல் எவ்வளவு? - திருச்சி
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/640-480-17824373-thumbnail-4x3-tri.jpg)
திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோயிலில் பக்தர்களால் செலுத்தப்பட்ட உண்டியல் காணிக்கை ஒவ்வொரு மாதமும் எண்ணப்படுவது வழக்கம். அதன்படி பக்தர்களால் செலுத்தப்பட்ட காணிக்கை உண்டியலைக் கோவில் இணை ஆணையர் செ.மாரிமுத்து முன்னிலையில் அறநிலையத்துறை ஊழியர்கள், கோவில் பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்களால் திருக்கோவிலில் உள்ள கருடாழ்வார் மண்டபத்தில் இன்று எண்ணப்பட்டது.
உண்டியல் எண்ணிக்கையில் 72 லட்சத்து 701 ரூபாய் பணம், 233 கிராம் தங்கம், 1432 கிராம் வெள்ளி, 372 வெளிநாட்டு ரூபாய் நோட்டுகள் பக்தர்களிடம் இருந்து காணிக்கையாகப் பெறப்பட்டன, என ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் மாரிமுத்து வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.