video:வால்பாறை தேயிலைத்தோட்டத்தில் குட்டியுடன் யானைகள் உலா - கோவை செய்திகள்
🎬 Watch Now: Feature Video
கோவை: கோவை மாவட்டத்தின் வால்பாறை சுற்றுவட்டாரப் பகுதிகளில் தனியாருக்குச் சொந்தமான தேயிலை தோட்டத்தில் காட்டு யானைகள் கூட்டமாக உள்ளன. சில நேரங்களில் நியாய விலைக் கடைகள், தொழிலாளர்கள் குடியிருக்கும் பகுதியில் வீடுகளை இடித்து சேதப்படுத்த வருகின்றன.
பகல் நேரங்களில் குடியிருப்பு பகுதியில் வராமல் இருக்க வனத்துறையினர் மற்றும் வேட்டைத் தடுப்பு காவலர்கள் அருகில் இருக்கும் வனப்பகுதிக்கு காட்டு யானைகளை விரட்டி வருகின்றனர். இதையடுத்து வால்பாறை அருகே உள்ள பாரி அக்ரோ இண்டஸ்ட்ரீஸூக்கு சொந்தமான தேயிலைத் தோட்டப் பகுதியில் குட்டியுடன் காட்டு யானைகள் உலா வருவதால் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் பணி செய்ய முடியமல் அச்சத்துடன் உள்ளனர். பின்னர், தொழிலாளர்கள் காட்டு யானைகளை கூச்சலிட்டு விரட்டியடித்தனர்.