Aadi Ammavasai: திருவண்ணாமலையில் 41 அடி உயர அம்மனுக்கு 108 பால் குடம் அபிஷேகம்! - கீழ்பென்னாத்தூர்
🎬 Watch Now: Feature Video
திருவண்ணாமலை: தமிழ்நாட்டில் இன்று ஆடி அமாவாசை பல்வேறு கோயில்களில் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் அடுத்த புதுபூண்டிதாங்கல் கிராமத்தில் 41 அடி உயரம் கொண்ட ஸ்ரீ காளியம்மன் மற்றும் அங்காள பரமேஸ்வரியம்மன் காளிசக்தி பீடம் ஆலயம் அமைந்துள்ளது.
ஆடி அமாவாசையினை முன்னிட்டு ஸ்ரீ சங்கர் சாமி தலைமையில் ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆலயத்திலிருந்து 108 பால் குடங்களை பெண்கள் ஊர்வலமாக எடுத்து வந்து 41 அடி உயரம் கொண்ட ஸ்ரீ காளியம்மனுக்கு கிரேன் மூலம் ஊற்ற உதவினர். மஞ்சள் தூள், அபிஷேகத் தூள், பஞ்சாமிர்தம், தயிர், தேன், பன்னீர், சந்தானம், விபூதி, மற்றும் 108 பால்குட அபிஷேகம் நடைபெற்று பின்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.
இந்த காளியம்மன் கோயில் பால் அபிஷேகத்தில் செவரப்பூண்டி மற்றும் கீழ்பென்னாத்தூரைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதையும் படிங்க: Tiruvannamalai BharataNatyam: 407 மாணவிகள் பரதநாட்டியம் ஆடி உலக சாதனை!