மூளை அறுவை சிகிச்சைக்கு மனம் தளராமல் பணம் ஈட்டிய சிறுமி - அலபாமா சிறுமி
🎬 Watch Now: Feature Video
அலபாமா: இந்த புத்தாண்டின் தொடக்க காலம் 7 வயது சிறுமியான லிசா ஸ்காட் வாழ்க்கையை அடியோடு புரட்டிப்போட்டது. சில உடல்நலக் கோளாறுகளுக்காக மருத்துவரை அணுகிய லிசாவிற்கு, மூளை அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் தெரிவிக்கவே, அந்த பிஞ்சு மனம் நொந்து போனது. ஆனால், மனம் தளராமல் தனது அறுவை சிகிச்சைக்கான பணத்தை சேகரிக்க முடிவு செய்தார்
அந்த தைரிய சிறுமி. லெமன் ஜுஸ் கடை ஒன்றை தொடங்கி அதன் மூலம் தற்போது 8 லட்சத்து 74 ஆயிரத்து 860 ரூபாயை (12 ஆயிரம் டாலர்) ஈட்டியுள்ளார். தன்னம்பிக்கை நாயகி லிசாவின் சிகிச்சைக்காக 2 கோடியே 11 லட்சத்து 42 ஆயிரத்து 450 (2 லட்சத்து 90 ஆயிரம் டாலர்) ரூபாய் நிதி ஆன்லைன் மூலமாகவும் கிடைத்துள்ளது. சிறுமி லிசா ஸ்காட் சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற நாமும் பிரார்த்திக்கலாம்.