Video:விடுமுறை நாளான இன்று பவானிசாகர் அணையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்..! - Increasing crowd of visitors on the bridge across Bhawani river
🎬 Watch Now: Feature Video
ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அணையில் இருந்து மேல் மதகுகள் வழியாக விநாடிக்கு 13 ஆயிரம் கன அடி நீர் உபரி நீராக திறக்கப்பட்டுள்ளது. பவானிசாகர் அணையில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டுள்ள தகவல் அறிந்த பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் விடுமுறை நாளான இன்று பவானிசாகர் அணைக்கு வந்தனர். அணை முன்புள்ள பாலத்தின் மீது நின்று அணையிலிருந்து உபரி நீர் வெளியேறும் காட்சியைக் கண்டு ரசித்தனர். மேலும் குடும்பத்துடன் செல்ஃபி மற்றும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். பவானி ஆற்றில் அதிகப்படியான தண்ணீர் வெளியேற்றப்படுவதால் வெள்ள நீர் ஓடும் பகுதிக்கும் பவானி ஆற்றின் கரையோரப்பகுதிகளுக்கும் பொதுமக்கள் செல்ல வேண்டாம் என நீர்வளத்துறை அலுவலர்கள் எச்சரித்துள்ளனர்.
Last Updated : Feb 3, 2023, 8:26 PM IST