மகளுடன் சேர்ந்து கணபதி பாப்பா மோர்யா என பக்தி முழக்கமிட்ட நடிகர் அல்லு அர்ஜூன் - தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன்
🎬 Watch Now: Feature Video
பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன், தனது மகள் அல்லு அர்ஹாவுடன் விநாயகர் ஊர்வலத்தில் கலந்து கொண்ட வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். "கணபதி பாப்பா மோர்யா" என்ற கேப்ஷனுடன் அந்த வீடியோவைப் பகிர்ந்துள்ளார். அதில், ஹைதராபாத்தில் நீர்நிலைகளில் கரைப்பதற்காக விநாயகர் சிலைகளை எடுத்துச்செல்லும் ஊர்வலத்திற்கு, அல்லு அர்ஜூன் தனது மகளுடன் சென்றுள்ளார். தங்கள் வீட்டில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த மஞ்சள் மற்றும் களிமண்ணாலான விநாயகர் சிலைகளைக்கொடுத்துவிட்டு, தேங்காய் உடைத்து வழிபாடு செய்தார். அப்போது, தனது மகளுடன் சேர்ந்து "கணபதி பாப்பா மோர்யா" என உற்சாகத்துடன் முழக்கமிடுகிறார். இந்த வீடியோவை அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
Last Updated : Feb 3, 2023, 8:27 PM IST