ETV Bharat / sports

சென்னையில் பிப்ரவரி 17 முதல் 20 வரை 23-வது தேசிய பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள்! - THE 23RD NATIONAL PARA ATHLETICS

சென்னையில் பிப்ரவரி 17 முதல் 20 வரை 23-வது தேசிய பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெறவுள்ளது. இந்த போட்டிகளில் 1700 பாரா வீரர் வீராங்கனைகள் இந்தியா முழுவதும் இருந்து கலந்து கொள்ளவுள்ளார்கள்.

விளையாட்டு துறையின் செயலாளர் அதுல்யா மிஸ்ரா உள்ளிட்டோர்
விளையாட்டு துறையின் செயலாளர் அதுல்யா மிஸ்ரா உள்ளிட்டோர் (Image credits-Etv Bharat Tamilnadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 28, 2025, 7:00 PM IST

Updated : Jan 28, 2025, 7:20 PM IST

சென்னை: சென்னையில் பிப்ரவரி 17 முதல் 20 வரை 23வது தேசிய பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெறவுள்ளது. இந்த போட்டிகளில் 1700 பாரா வீரர் வீராங்கனைகள் இந்தியா முழுவதும் இருந்து கலந்து கொள்ளவுள்ளார்கள்.'

சென்னையில் பிப்ரவரி 16 டிரையத்லான் ஆசிய கோப்பை நேரு விளையாட்டு மைதானத்தில் நடைபெறுகிறது. இந்தியா, ஜப்பான், அயர்லாந்து உட்பட 15 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் கலந்து கொள்ள உள்ளார்கள். 23 ஆண்டுகளில் தனியாரின் பங்களிப்பு இல்லாமல் நடத்தப்படும் முதல் பாரா தடகள சாம்பியன்ஷிப் தொடர் இது தான். இதற்கான செலவுகள் மொத்தமும் தமிழ்நாடு அரசு மேற்கொள்கிறது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு விளையாட்டு துறையின் செயலாளர் அதுல்யா மிஸ்ரா, "டிரையத்தலான் போட்டி ஒலிம்பிக்கில் நடத்தப்படும் தூரத்தில் பாதி அளவு கொண்ட போட்டியாக சென்னையில் நடைபெறுகிறது. இந்த போட்டி கடலில் நீச்சல் அடித்தல், சைக்கிளிங், மற்றும் ஓட்டம் எனும் மூன்றும் கொண்டதாக இருக்கும். 1700 பாரா வீரர் வீராங்கனைகள் இந்தியா முழுவதும் இருந்து கலந்து கொள்ளவுள்ளார்கள். தமிழகத்தில் இருந்து 150 பேர் வரை கலந்துகொள்வார்கள். இது போன்ற போட்டிகள் நடைபெறுவதால் விளையாட்டின் மீது ஆர்வம் அதிகரிக்கிறது,"என்றார்.

செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலாளர் மேகநாத ரெட்டி, "தமிழகத்தில் தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளை வெற்றிகரமாக நடத்தி வருகிறோம். பெரிய விளையாட்டுப் போட்டிகளுக்கான முகவரியாக தமிழகம் உள்ளது.
2025-ல் நிறைய போட்டித் தொடர்களை நடத்த உள்ளோம். பிப்ரவரி மாதத்தில் இரண்டு முக்கியமான போட்டித் தொடர்கள் நடைபெறவுள்ளது. இந்த போட்டிகளை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு மற்றும் மற்றும் அந்தப் போட்டிகளின் அசோசியேஷன்களுடன் இணைந்து நடத்தவுள்ளது.

இதையும் படிங்க: முல்லைப் பெரியாறு அணை நூறு பருவமழை காலங்களை எதிர் கொண்டுள்ளது...அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

பிப்ரவரி 16 டிரையத்லான் ஆசிய கோப்பை நடைபெறவுள்ளது. கேலோ இந்தியா முதல் கட்டத்தில் போட்டியில் கலந்து கொள்ள தமிழகத்திலிருந்து 11 ஐஸ் ஸ்கேட்டிங் வீரர்களை தயார் செய்தோம். ஐஸ் ஸ்கேட்டிங் போட்டியில் மூன்று தங்கம், இரண்டு வெள்ளிப் பதக்கங்களை தமிழக வீரர்கள் வென்று உள்ளார்கள். இந்தத் தொடரில் கலந்துகொள்ளவுள்ள வீரர் வீராங்கனைகளுக்கு அனைத்து விதமான வசதிகளும் செய்து கொடுக்கப்படும்.

பஞ்சாபில் ஒருதலைபட்சமாக நடந்ததாக தமிழக வீராங்கனைகளின் குற்றச்சாட்டை முழுவதுமாக சரியென்று சொல்ல முடியாது. கபடி தொடுதல் விளையாட்டு என்பதால் அதில் சில பிரச்னைகள் இருக்கும். விளையாட்டுப் போட்டியின் போது சிறு சிறு பிரச்சனைகள் வருவது சாதாரணமானது. அதைப் பொதுமைப்படுத்த முடியாது. தமிழ்நாட்டிற்குள் நடத்தப்படும் போட்டியின் போது ஒரு மாவட்டத்தினருக்கு மற்றொரு மாவட்டத்தினருக்கு இடையே பிரச்சனைகள் வருவதும் சாதாரணமாக உள்ளது.

விளையாட்டின் போது விதிமுறைகளுக்கு உட்பட்டு நடத்தப்படுகிறதா? என்பதை தான் கவனிக்க வேண்டும். தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகள் வட மாநிலத்தில் நடைபெறுவதை போல நாமும் மூன்று ஆண்டுகளாக நடத்தி வருகிறோம். மேலும் நடத்துவதற்கும் முயற்சி செய்து வருகிறோம். காது கேளாத வீரர்கள் போட்டிகளுக்குச் செல்ல தமிழ்நாடு அரசு உதவிகளைச் செய்துவருகிறது. இந்தியாவிலேயே அவர்களுக்கு உதவும் ஒரே மாநிலம் தமிழகம் தான்,"என்றார்.

Last Updated : Jan 28, 2025, 7:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.