ETV Bharat / state

2047-ல் சுயசார்புமிக்க வளர்ந்த நாடாக இந்தியா இருக்கும்...ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு! - GOVERNOR R N RAVI SPEECH

2047ஆம் ஆண்டில் இந்தியா சுயசார்புமிக்க வளர்ந்த நாடாக இருக்கும். மாணவர்கள் அறிவுசார் சொத்துக்களை உருவாக்குவதுடன் புதிய ஆராய்ச்சிகளை கண்டுபிடிப்புகளுக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

தனியார் தொழில்நுட்ப கல்லூரியின் 25ம் ஆண்டு துவக்க விழாவில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி
தனியார் தொழில்நுட்ப கல்லூரியின் 25ம் ஆண்டு துவக்க விழாவில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி (Image credits-Etv Bharat Tamilnadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 28, 2025, 7:21 PM IST

Updated : Jan 28, 2025, 7:29 PM IST

திருநெல்வேலி: 2047-ல் இந்தியா சுயசார்புமிக்க வளர்ந்த நாடாக இருக்கும். மாணவர்கள் அறிவுசார் சொத்துக்களை உருவாக்குவதுடன் புதிய ஆராய்ச்சிகளை கண்டுபிடிப்புகளுக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என நெல்லை கல்லூரி வெள்ளிவிழா நிகழ்வில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலி மாவட்டம் மேலத்திடீயூரில் உள்ள பிஎஸ்என்என் தனியார் தொழில்நுட்ப கல்லூரியின் 25ம் ஆண்டு துவக்க விழா மற்றும் தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, "நெல்லை மண் வீரத்திற்கு பெயர் பெற்ற பூமி. ஆங்கிலேயர்களை எதிர்த்து வீரமாக போராடிய ஏராளமான சுதந்திரப் போராட்ட வீரர்கள் இந்த மண்ணைச் சேர்ந்தவர்கள். வ .உ .சி. சுதேசி இயக்கத்தை தொடங்கி, நாடு முழுக்க சுதந்திர போராட்டத்தை எதிரொலிக்க செய்யும் வகையில் சுதேசி கப்பலை விட்டார். ஆங்கிலேயர்களை எதிர்த்து வணிகம் செய்தார். இதே போல் ஆங்கிலேயர்களை எதிர்த்த இளம் வீரர் வாஞ்சிநாதன். ஆங்கிலேயே ஆட்சியாளரை சுட்டுக்கொன்று தன்னையும் மாய்த்துக் கொண்டார். மகாகவி பாரதி தனது பாடல்கள் மூலம் நாடு முழுவதும் சுதந்திர உணர்வை ஊட்டினார்.

இதையும் படிங்க: மினி பேருந்துகளுக்கான கட்டணம் நிர்ணயம்... தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

தற்போது உள்ள இளைஞர்கள் நாட்டின் வரலாற்றை அதன் பாரம்பரியத்தை உணர வேண்டும். 2047 இல் இந்தியா 100ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடுகிற போது வளர்ந்த நாடாக இருக்கும். ஆங்கிலேயர்களின் வருகைக்கு முன்பு உலக பொருளாதாரத்தில் இந்தியா முன்னிலையில் இருந்தது. 2014இல் 16வது இடத்திற்கு தள்ளப்பட்டது. இப்போது ஐந்தாவது இடத்திற்கு முன்னேறி உள்ளது. இன்னும் சில ஆண்டுகளில் மூன்றாவது இடத்தை பிடிக்கும். இந்தியா தன்னிறைவு பெற்ற நாடாக மாறியிருக்கும். தொழில் நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு மாணவர்களாகிய நீங்கள் உங்களை மாற்றிக் கொள்ள வேண்டும்.

அறிவுசார் சொத்துக்களை உருவாக்குவதில் சர்வதேச அளவில் சீனா 46 சதவீத பங்களிப்பை செய்து வருகிறது. அமெரிக்கா 18 சதவீத பங்களிப்பை அளித்து வருகிறது. 2020 ஆம் ஆண்டில் இந்தியாவில் 22 ஆயிரம் அறிவு சார் சொத்துக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இது உலக அளவில் 0.5% ஆகும். கடந்த நான்கு ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை ஒரு லட்சமாக உயர்ந்துள்ளது,"என்று பேசினார்.

Last Updated : Jan 28, 2025, 7:29 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.