நீரில் மூழ்கிய பொன்னாங்குளம் தரைப்பாலம் - ஆபத்தை உணராத மக்கள்! - திருவள்ளூர் மழை பாதிப்பு
🎬 Watch Now: Feature Video
திருத்தணி அடுத்த பொன்னாங்குளம் கிராமத்தில் உள்ள தரைப்பாலம் மூழ்கியதால், இந்த பாலத்தைக் கடந்து பாகசாலை, 20-திற்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் அத்தியாவசியத் தேவைகளுக்காக 20 கிலோ மீட்டர் தூரம் சுற்றிச் செல்லவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ள தரைப்பாலத்தில் குழந்தைகள், பெண்கள் என குடும்பத்துடன் குளிப்பதும், செல்ஃபி எடுப்பதும், சிறுவர்கள் ஆபத்தை உணராமல் விளையாடியும் வருகின்றனர். எனவே வெள்ள நீர் அதிகரிக்கும் பட்சத்தில் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் இருப்பதால் காவல்துறையும், மாவட்ட நிர்வாகமும் அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.