ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டாலும் மேற்படிப்பில் ஆர்வம் காட்டும் சிங்கப் பெண்! - ஆசிட் வீச்சால் தாக்கப்பட்ட பெண்ணுக்கு மதுரையில் சிகிச்சை
🎬 Watch Now: Feature Video
நேபாளத்திலுள்ள மக்வன்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிந்தபாசினி கன்சகர். இவர் மீது 2013ஆம் ஆண்டு ஏப்ரல் 22ஆம் நாள் திலீப் ராஜ் கேசரி என்ற இளைஞர் ஆசிட் ஊற்றினார். இதனால் பெரிதும் பாதிப்படைந்த பிந்தபாசினி தன்னம்பிக்கையுடன் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு, தான் இழந்த தோற்றத்தை மீண்டும் பெற்று வருகிறார். மேலும் இவர் தனக்கு ஆடை வடிவமைப்புத் துறையில் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் உள்ளதாகவும், தன் படிப்புக்கு யாரேனும் உதவ வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார்.
Last Updated : Dec 16, 2019, 1:13 AM IST