எங்களை கருணை கொலை செய்யுங்கள் - கதறும் பார்வை திறன் குன்றிய மாற்றுத்திறனாளிகள்! - சென்னை செய்திகள்
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-10717215-568-10717215-1613904985150.jpg)
பார்வை குறைந்த தங்களுக்கு அரசுப் பணி வழங்க முடியாவிட்டால், உச்ச நீதிமன்றத்தில் அனுமதி பெற்று எங்களைக் கருணை கொலை செய்யுங்கள் எனத் தொடர்ந்து 5ஆவது நாளாகப் போராட்டம் நடத்திவரும் மாற்றுத்திறனாளிகள் செய்தியாளர்களிடம் கதறுகின்றனர். பல துறையிலும் பல பட்டங்களைப் பெற்ற தங்களுக்கு உரிமையின் அடிப்படையில் அரசு வேலை வழங்கினால் போதும் எனக்கூறும் இவர்கள், தங்களுக்கு எந்தவிதக் கருணையும் காட்டத் தேவையில்லை, அரசு வேலை வழங்கும்வரை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் எனத் தெரிவிக்கின்றனர்.
முதலமைச்சர், அமைச்சர்கள் , தலைமை நீதிபதி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் செல்லும் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பார்வைத் திறன் குறைந்த மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகள், ஐந்து நாட்களாகியும் இதுவரை அரசின் காதுகளுக்குக் கேட்கவில்லை என்பது வேதனைக்குரியது.