மருத்துவமனையைச் சுற்றிப்பார்த்த சிறுத்தை: பீதியில் உறைந்த மக்கள் - சிறுத்தை உலாவும் சிசிடிவி காட்சி
🎬 Watch Now: Feature Video
கர்நாடக மாநிலம் யாதபுராவில் அமைந்துள்ள சாமராஜநகர் மருத்துவமனைக்குள், இன்று (ஜன. 07) அதிகாலை சிறுத்தை ஒன்று திடீரென நுழைந்துள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வனத் துறையினர், சிறுத்தையைப் பிடித்து வனப்பகுதிக்குள் விட்டனர். சிறுத்தை உலாவும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.