மரக் கட்டைக்கு உயிரூட்டும் பெண்கள்! - உதயகிரி கலைப் பொருள்கள்
🎬 Watch Now: Feature Video
நம் மனதிற்கு பிடித்தமான மர பொம்மைகளை வாங்குவதற்கு சிறந்த ஒரே இடம் கோண்டப்பள்ளி தான். ஆனால் தற்போது உதயகிரியும் இந்த மர பொம்மை சந்தை துறையில் நுழைந்துள்ளது. இவர்கள் நாம் எதிர்பார்ப்பதை விட அதிக பொருள்களை உலகிற்கு வழங்குகின்றனர். உதயகிரியின் திலாவர் பாய் தெருவில், மெல்லிய அறுக்கும் ஒலிகளுக்கு மத்தியில், பல மரப் பொருட்கள் பல்வேறு உயிர்புடன் காட்சியளிக்கின்றன. ஒவ்வொரு மரக்கட்டைகளும் ஒரு நேர்த்தியான வடிவத்தைப் பெறுகின்றன.