அபுஜ்மத் மாய புல்லாங்குழல்! - Abujhmad
🎬 Watch Now: Feature Video
மாய இசை வழங்கும் அபுஜ்மத் புல்லாங்குழல் வாய் மூலமாக இசைக்கப்படுவதில்லை. காற்றின் திசையில் சூழன்று அதற்கேற்றவாறு இசையை ஒலிக்கவைக்கிறது. இம்மாதிரியான புல்லாங்குழல் எதன் மூலம் செய்யப்படுகிறது, யார் செய்கிறார்கள், யார் அதனை வாங்குகிறார்கள் என்ற கேள்வி அனைவரின் மத்தியிலும் எழுந்துள்ளது. இதற்கான விடைகளை தெரிந்து கொள்ள வேண்டுமானால், சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தாரில் உள்ள நாராயண்பூருக்கு நீங்கள் செல்ல வேண்டும். கர்பெங்கால் கிராமத்தில் உள்ள புல்லாங்குழல் தயாரிப்பாளர்கள் இதுகுறித்து கதையை சொல்வார்கள். இந்தியாவில் மட்டுமல்லாமல் இத்தாலி, ரஷ்யா போன்ற வெளிநாடுகளிலும் இந்த புல்லாங்குழல் மிகப் பிரபலம்.