பிறந்தநாளை கொண்டாட குஜராத் வந்த நரேந்திர மோடி! - மோடி
🎬 Watch Now: Feature Video
பிரதமர் நரேந்திர மோடி தனது 69ஆவது பிறந்தநாளை இன்று கொண்டாடுகின்றார். இதற்காக நேற்று இரவு அவரது சொந்த ஊரான குஜராத் மாநிலம் அகமதாபாத் நகருக்கு வந்தார். அவருக்கு, விமான நிலையத்தில் மாநில முதலமைச்சர் விஜய் ரூபானி, ஆளுநர் ஆச்சார்யா தேவ்ரத், மாநில அமைச்சர்களும் சிறப்பு வரவேற்பு அளித்தனர். விமான நிலையத்திற்கு வெளியில் பாஜகவினர் மோடி வாழ்க போன்ற கோஷமிட்டு மோடியை வாழ்த்தினர். அகமதாபாத் நகரம் முழுவதும் பிரதமரை வரவேற்றும் வாழ்த்தியும் விளம்பரப் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன.