'மாபெரும் தமிழ் துறவி' - வள்ளுவருக்குப் புகழாரம் சூட்டிய மோடி - சர்வதேச யோகா தினம்
🎬 Watch Now: Feature Video
சர்வதேச யோகா நாளை முன்னிட்டு நாட்டு மக்களிடையே உரையாடிய பிரதமர் மோடி 'நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்' என்னும் திருக்குறளை மேற்கோள் காட்டினார். நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்குப் பொருந்தும்படியான செயலைச் செய்ய வேண்டும் என்பது இதன் பொருளாகும். குறளை மேற்கோள்காட்டும்போது அவர், மாபெரும் தமிழ் துறவி திருவள்ளூவர் எனப் புகழாரம் சூட்டினார்.
Last Updated : Jun 21, 2021, 1:19 PM IST