எங்கேயும் எப்போதும் நிகழும் மரணம் - பாடிக்கொண்டிருந்தபோதே உயிரைவிட்ட கலைஞர்! - மேடையிலேயே மயங்கி சரிந்த வீடியோ காட்சிகள்
🎬 Watch Now: Feature Video
கர்நாடக மாநிலம் மங்களூருவில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியின்போது மேடையில் பாடிக்கொண்டிருந்த ஆர்கெஸ்ட்ரா கலைஞர் ஜெர்ரி என்பவர் திடீரென மயங்கி விழுந்தார். உடனே அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஜெர்ரியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதை உறுதி செய்தனர். அவர் மேடையிலேயே மயங்கி சரிந்த காணொலிக் காட்சி தற்போது வெளியாகி உள்ளது.