ETV Bharat / state

'நெஞ்சம் பதறுகிறது'.. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அதிமுக, தேமுதிக அறிவிப்பு..! - ADMK BOYCOTT ERODE BY ELECTION

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக, தேமுதிக ஆகிய இரு கட்சிகள் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன. நாம் தமிழர், பாஜக உள்ளிட்ட கட்சிகள் தங்களது நிலைப்பாட்டை தெரிவிக்காமல் உள்ளன.

எடப்பாடி பழனிசாமி, பிரேமலதா விஜயகாந்த் (கோப்புப்படம்)
எடப்பாடி பழனிசாமி, பிரேமலதா விஜயகாந்த் (கோப்புப்படம்) (credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 11, 2025, 5:55 PM IST

சென்னை: ஈரோடு கிழக்குத் தொகுதியின் எம்எல்ஏ-வாக இருந்த காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உடல்நல குறைவால் கடந்தாண்டு டிசம்பரில் காலமானர். இதனால் ஈரோடு கிழக்குத் தொகுதி காலியென அறிவிக்கப்பட்டு, பிப்ரவரி 5-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இந்நிலையில், காங்கிரஸ் போட்டியிட்டு வந்த இந்த தொகுதியின் இடைத்தேர்தலில் திமுக சார்பில் வேட்பாளராக வி.சி. சந்திரகுமார் களமிறக்கப்பட்டுள்ளார். மேலும், இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடுமா என்ற எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், இடைத் தேர்தலை புறக்கணிப்பதாக அதிமுகவும், தேமுதிகவும் அறிவித்துள்ளன.

நெஞ்சம் பதறுகிறது

இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், '' திமுக ஆட்சிக் காலங்களில், திமுக-வினரால் நிகழ்த்தப்பட்ட அராஜக, வன்முறைச் சம்பவங்கள் எண்ணிலடங்காதவை. கடந்த முறை நடைபெற்ற ஈரோடு (கிழக்கு) சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தலில், அள்ளி இறைக்கப்பட்ட பணம், மது, கொலுசு, குக்கர், தங்கக் காசு உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் என, இவை எல்லாவற்றையும் தாண்டி திமுக-வின் மிரட்டல், அப்பாவி மக்களைப் பெருமளவில் அச்சுறுத்தியது.

வாக்காளர்களை பட்டியில் அடைத்த அவலமும் நடந்தேறியது. திமுக-வினர் அழைக்கும் இடத்திற்கு வந்து காலை முதல் இரவு வரை உட்கார்ந்து இருக்கவில்லையென்றால், முதியோர் உதவித் தொகையோ, வேறு எந்த அரசு நலத் திட்டங்களோ வழங்கப்படமாட்டாது என்கிற மிரட்டலுக்கு பயந்து, மக்கள் சொந்த மண்ணில் அகதிகளைப் போல நடத்தப்பட்ட விதத்தை நினைத்தாலே நெஞ்சம் பதறுகிறது.

நடைபெற உள்ள ஈரோடு (கிழக்கு) சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தலிலும், நிர்வாகத் திறனற்ற விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசின் அமைச்சர்களும், திமுக-வினரும் ஆட்சி அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவார்கள். பணபலம், படைபலத்துடன் பல்வேறு அராஜகங்கள் மற்றும் வன்முறைகளை கட்டவிழ்த்துவிட்டு, மக்களை சுதந்திரமாக வாக்களிக்க விடமாட்டார்கள். தேர்தல் சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடைபெறாது. இதனால் 5.2.2025 அன்று நடைபெற உள்ள ஈரோடு (கிழக்கு) சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தலை, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் புறக்கணிக்கிறது'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேமுதிக புறக்கணிப்பு

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ''இதுவரை தமிழக தேர்தலில் நடக்காத ஒரு தேர்தலாக, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஆடுகளை மந்தையில் அடைத்து வைத்தது போல் மக்களை அடைத்து வைத்து, ஜனநாயக விரோத தேர்தலை திமுக நடத்தி வெற்றி பெற்றதாக அறிவித்தனர். அதே பாணி இடைத்தேர்தல் தான் மீண்டும் நடக்க போகிறது. எனவே ஜனநாயகத்திற்கு விரோதமாக நடக்கும் இந்த தேர்தலில் நம்பிக்கை இல்லாத காரணத்தால், இந்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை தேமுதிக புறக்கணிக்கிறது'' என கூறியுள்ளார்.

மேலும், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை குறித்து நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தங்களது நிலைப்பாட்டை அதிகாரப்பூர்வமாக தெரிவிக்காமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.