ETV Bharat / technology

2025 டாடா நெக்சான் அறிமுகம்: பட்ஜெட்டில் டஃப் போட்டி கொடுக்க தயாராகும் காம்பேக்ட் எஸ்யூவி! - TATA NEXON 2025 PRICES

டாடா மோட்டார்ஸ் நிறுவனம், 'டாடா நெக்சான்' 2025 காரை பட்ஜெட் விலையில் சிறந்த அம்சங்களுடன் அறிமுகம் செய்துள்ளது.

டாடா நெக்சான் 2025
டாடா நெக்சான் 2025 (Tata Motors)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 11, 2025, 5:32 PM IST

டாடா மோட்டார்ஸ், இந்தியாவின் பெரும் மதிப்புமிக்க நிறுவனமாக, கார் விரும்பிகளை திருப்திப்படுத்தும் வகையில் பல்வேறு தளங்களில் பட்ஜெட் விலையில் கார்களை களமிறக்கி வருகிறது. தற்போது, நிறுவனம் தங்களின் மேம்படுத்தப்பட்ட 'டாடா நெக்சான்' காரின் 2025 மாடலை களமிறக்கியுள்ளது.

இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.7.99 லட்சம் முதல் தொடங்குகிறது என்பது கூடுதல் சிறப்பாகப் பார்க்கப்படுகிறது. இந்த நேரத்தில் புதிய நெக்சான் காரின் வண்ண விருப்பங்கள், மேம்படுத்தப்பட்ட அம்சங்கள், வகைகள் குறித்து தங்களின் எக்ஸ் தளத்தில் டாடா மோட்டார்ஸ் பதிவிட்டுள்ளது.

2025 டாடா நெக்சான் விலை:

சந்தையில் தற்போது விற்பனை செய்யப்படும் நெக்சான் கார்களின் அடிப்படை மாடல் விலையிலே, புதிய காரின் எக்ஸ்-ஷோரூம் விலையும் தொடங்குகிறது. மேலும், புதிய மாடலில் ஒரு புதுவிதமான வண்ணம் சேர்க்கப்பட்டுள்ளது. அதற்கு, 'கிராஸ்லேண்ட் பெய்ஜ்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. புதிதாக நெக்சான் வகைகளில் ப்யூர்+, கிரியேட்டிவ், கிரியேட்டிவ்+ ஆகிய மூன்று மாடல்கள் இணைக்கப்பட்டுள்ளன.

  • டாடா நெக்சான் ப்யூர்+ - ரூ.9.69 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்)
  • டாடா நெக்சான் கியேட்டிவ் - ரூ.10.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்)
  • டாடா நெக்சான் கியேட்டிவ்+ - ரூ.12.29 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்)

2025 டாடா நெக்சான் புதிய அம்சங்கள் என்ன?

டாடா மோட்டார்ஸின் இந்த ஆண்டு பட்ஜெட் காராக வெளியாகியுள்ள நெக்சான், சில மேம்பட்ட அம்சங்களுடன் புதுப்பிக்கப்பட்டுள்ளது. புதிய காரில் வாய்ஸ் அசிஸ்டட் பேனரோமிக் சன்ரூஃப், காற்றோட்ட அமைப்புடன் வரும் லெதர் இருக்கைகள்,10.24 அங்குல தொடுதிரையுடன் கூடிய ஹார்மன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 360 டிகிரி கேமரா ஆதரவுடன் மெருகேற்றப்பட்டுள்ளது.

இதுமட்டுமில்லாமல், இ-ஷிஃப்டர் உடன் வரும் 7 ஸ்பீடு டிசிஏ கியர் டிரான்ஸ்மிஷன் மற்றும் பேடில் ஷிஃப்டர், சப்-வூப்பர் உடன் வரும் 9 ஜே.பி.எல் (JBL) ஸ்பீக்கர்ஸ் ஆகியன இடம்பெற்றுள்ளன.

2025 டாடா நெக்சான் எஞ்சின்:

புதிய டாடா நெக்சான் இரண்டு எஞ்சின் விருப்பங்களைக் கொண்டுள்ளது. டாடாவின் பிரத்யேக 1.2 லிட்டர் டர்போசார்ஜ்டு ரெவெட்ரான் (Revotron) பெட்ரோல் எஞ்சின், 1.5 லிட்டர் ரெவோடார்க் (Revotorq) டீசல் எஞ்சின் ஆகியவற்றுடன் இந்த கார்கள் கிடைக்கும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதில் பெட்ரோல் எஞ்சின் 86.7 பி.எச்.பி சக்தியையும், 170 என்.எம் திறனையும் வெளிப்படுத்தும். அதேநேரம், டீசல் எஞ்சின் பொருத்தவரை 83.3 பி.எச்.பி சக்தியையும், 260 என்.எம் திறனையும் வெளிப்படுத்தும்.

புதிய நெக்சானின் சி.என்.ஜி வகை கார் 72.5 பி.எச்.பி சக்தியையும், 170 என்.எம் திறனையும் வெளிப்படுத்தும் என நிறுவனம் கூறுகிறது. பிற அனைத்து அம்சங்களும் பழைய நெக்சான் காரை ஒத்திருப்பது குறிப்பிடத்தக்கது. நெக்சான் வகை கார்களின் மைலேஜ் லிட்டருக்கு சுமார் 16 முதல் 22 கிலோ மீட்டராக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

புதிய 2025 'டாடா நெக்சான்' சப்-காம்பேக்ட் எஸ்யூவி, ஹூண்டேய் வென்யூ, மஹிந்திரா 3XO, கியா சானட், மாருது சுசூகி பிரீசா மற்றும் ஃப்ரான்ஸ், ஸ்கோடா கைலாக் ஆகிய மாடல்களுக்கு சந்தையில் பெரும் போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.