'கமகமக்கும் மசாலா டீ வேண்டுமா' - இப்படி செஞ்சு பாருங்க - tea drinkers
🎬 Watch Now: Feature Video
சாப்ட்வேர் இன்ஜினியர்கள் முதல் கூலி வேலை செய்பவர்கள் வரை டீ, காபியை விரும்பாதவர்கள் யாரும் இல்லை என்றே கூறலாம். அதிலும் டீ பிரியர்களுக்கு ஒரு நாளைக்கு எத்தனை டீ குடித்தாலும் அதன்மீதான காதல் தீராது. இந்தியத் தேயிலை வாரியம் நடத்திய ஒரு ஆய்வில், டீ குடிக்கும் முறை மாறினாலும், 80 விழுக்காட்டினர் டீயை பாலுடன் கலந்து அருந்தவே விரும்புகிறார்கள் என்பது தெரியவந்துள்லது. ஒரு சிறந்த டீயை இன்றே சுவைக்க, 'மசாலா சாய்' எப்படி செய்வதென்ற செய்முறை விளக்கத்தைக் கொடுத்துள்ளோம். இதைப்போல செய்து மாலை வேளையில் குடித்தால், குளிருக்கு இதமாக இருப்பதுடன், மனதைப் புத்துணர்ச்சியாகவும் வைத்துக் கொள்ளாலம்.