தண்ணி போடாமல் தண்ணீருக்குள் ஆட்டம்! - தண்ணீருக்குள் ஆட்டம்
🎬 Watch Now: Feature Video
ராஜ்கோட்: பொதுவாக நம் வீட்டின் அருகே தண்ணி போட்டுவிட்டு 'வேணாம் பிலிப்ஸ்சு' என்று ஆடி பார்த்திருப்போம். ஆனால், குஜராத் மாநிலம் ராஜ்கோட்டைச் சேர்ந்த ஜெய்தீப் கோயல் என்ற இளைஞர் சற்று வித்தியாசமாக தண்ணி போடாமல் தண்ணீருக்குள் அட்டகாசமாக ஆடுகிறார். இவர் 2015ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியா காட் டேலண்ட் நிகழ்ச்சியில், அக்ஷ்ய் குமாருடன் நடனமாடி கவனத்தை ஈர்த்தவர். நடனத்தையும் நீச்சலையும் இணைத்த இவரது வித்தியாசமான பாணி, பார்ப்போரை பிரம்மிக்க செய்கிறது என்றால் மிகையில்லை.