திருணாமூல் காங்கிரஸ் பிரமுகர் வீட்டில் சிக்கிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்! - திரிணாமுல் காங்கிரஸ் கட்சி
🎬 Watch Now: Feature Video
மேற்கு வங்கத்தில் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றுவரும் நிலையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், விவிபாட் சாதனம் ஆகியவை திருணாமூல் காங்கிரஸ் கட்சியின் பிரமுகர் வீட்டில் சிக்கியுள்ளது. உளுபெரியா சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட பகுதியில் திருணாமூல் காங்கிரஸ் கட்சியின் கவுதம் கோஷ் என்பவரது வீட்டில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மறைத்துவைக்கப்பட்டிருப்பதாக பாஜக வேட்பாளர் சிரன் பேரா குற்றம் சாட்டியுள்ளார். இதனைத் தொடர்ந்து, அங்கிருந்து மக்கள் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.