'சிலையுடன் குத்துச் சண்டை பயிற்சி' - போதை இளைஞரின் அடாவடி - சிலை மீது தாக்குதல்
🎬 Watch Now: Feature Video
மத்தியப் பிரதேச மாநிலம் முரைனா மாவட்டம் போர்சா தெஹ்ஸில் (Porsa tehsil) பகுதியில் சுதந்திரப் போராட்ட வீரர் சாது சிங் தோமர் சிலை அமைந்துள்ளது. ராமுசிங் எனும் இளைஞர் குடிபோதையில் அந்தச் சிலையின் மீது ஏறி உடைக்கும் முயற்சியில் ஈடுபட்டார். இந்த மோசமான செயலை பார்த்த உள்ளூர் வாசி ஒருவர் ஆத்திரத்தில் அவரை குச்சியால் அடித்தார். ஆனால் ராமுசிங் கீழே இறங்காமல் தொடர்ந்து சிலையை தாக்கினார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.