கிரண்பேடிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த மூதாட்டி - நாட்டுப்புற பாடல் பாடி அசத்தல்
🎬 Watch Now: Feature Video
புதுச்சேரி அருகே சோம்பட்டு கிராமத்தில் தூர்வாரப்பட்ட குளம் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக கொண்டுவரப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி பங்கேற்றார். அப்போது, அங்கு கூடியிருந்த பொதுமக்கள், விவசாயிகள் பலர் ஆளுநரை புன்சிரிப்போடு வரவேற்றனர். அப்போது, கிரண்பேடி சிறிது நேரம் அங்கிருந்த மக்களிடம் கலந்துரையாடல் நடத்தினார். தொடர்ந்து அப்பகுதியைச் சேர்ந்த மூதாட்டி சரோஜா என்பவர், ஆளுநர் கிரண்பேடியின் அருகே வந்து தனது வாழ்க்கை நடைமுறை பற்றிய நாட்டுப்புறப் பாடல் ஒன்றை பாடி அசத்தினார். பாடலுக்கான ஆங்கில அர்த்தங்களை உடனிருந்த அலுவலர்களிடம் கேட்டு தெரிந்து கொண்ட கிரண்பேடி அந்த மூதாட்டியை பாராட்டினார்.