விளக்கு ஒளியில் வரையப்பட்ட மணல் ஓவியம்.. இயற்கைக் காட்சிகள், புராதன சின்னங்கள் - விளக்கு ஒளியில் வரையப்பட்ட மணல் ஓவியம்.. இயற்கைக் காட்சிகள், புராதன சின்னங்கள்
🎬 Watch Now: Feature Video
திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் மற்றும் தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர்கள் பதிப்பாளர்கள் சங்கம் சார்பில் பாளையங்கோட்டை வ.உ.சி மைதானத்தில் கடந்த 17-ஆம் தேதி நெல்லை பொருநை ஐந்தாவது புத்தகக் கண்காட்சி் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் புத்தகக் கண்காட்சியின் 4- ம் நாள் நிகழ்வில் கருத்தரங்கம், பட்டிமன்றம் ஆகியவை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பெங்களூரைச் சேர்ந்த வேந்திரா என்பவர் விளக்கு ஒளியில் மணலால் ஓவியம் வரைந்து அசத்தினார். இதில் இயற்கைக் காட்சிகள், புராதான சின்னங்கள், இந்திய வரைபடம், பாரதமாதா என விளக்கொளியில் வண்ண வண்ண ஓவியங்களை மணல் மூலம் நொடிப்பொழுதில் வரைந்து காட்டினார்.
Last Updated : Feb 3, 2023, 8:20 PM IST