13 மாடி குடியிருப்பில் தீ விபத்து - குழந்தைகள் உள்பட 8 பேர் பலி! - Fire breaks out in an apartment 8 died
🎬 Watch Now: Feature Video
தன்பாத்: ஜார்க்கண்ட் மாநிலம், தன்பாத்தில் 13 மாடி குடியிருப்பில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் குழந்தைகள் உள்பட 8 பேர் உடல் கருகி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குடியிருப்பின் 2-வது மாடியில் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில், தீ மெல்ல கட்டடம் முழுவதும் பரவியதாக கூறப்படுகிறது. ஏறத்தாழ 100 வீடுகள் இருக்கும் நிலையில், 400க்கும் மேற்பட்ட மக்கள் தீ விபத்தில் சிக்கிக்கொண்டதாக சொல்லப்படுகிறது. காட்டுத் தீயில் கருகி குழந்தைகள் உள்பட 8 பேர் உடல் கருகி உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். 5 வாகனங்களில் வந்த தீ அணைப்புத்துறையினர், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் வீடுகளில் சிக்கி உள்ள குழந்தைகள், பெண்கள் உள்ளிட்டோரை மீட்கும் பணியில் வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.