குடியரசு தின விழா; 125 பேருக்கு அரிசி, மளிகைப் பொருட்கள் வழங்கிய கவுன்சிலர் - நாட்றம்பள்ளி
🎬 Watch Now: Feature Video
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி தாலுகா நாட்றம்பள்ளி பேரூராட்சிக்குட்பட்ட 14-வது வார்டு உறுப்பினர் குருசேவ். இவர் இந்தியாவின் 74-வது குடியரசு தினத்தை முன்னிட்டு ஏழை எளிய மக்கள், விதவைகள், ஆதரவற்றோர் சுமார் 125 பேருக்கு 25 கிலோ எடையுள்ள அரிசி சிப்பம் ஒன்று, ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 25 பொருட்கள் அடங்கிய மளிகை சாமான்களை இலவசமாக வழங்கினார்.
மேலும் இலவச பொருட்களை வாங்க வந்த பொதுமக்களிடம் இந்தியா எவ்வளவு தியாகத்தை வலிகளைக் கடந்து சுதந்திரம் அடைந்தது, எப்படி குடியரசு பெற்றது என்பது குறித்து விளக்கங்களை கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். வார்டு உறுப்பினரின் இந்த சேவை மனப்பான்மை, தேசப்பற்றை ஏழை எளிய மக்கள் வெகுவாக வரவேற்றுப் பாராட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது.