Video: Republic Day Celebration:திருச்சியில் நடனம் ஆடிய அமமுக மாமன்ற உறுப்பினர் - Trichy News
🎬 Watch Now: Feature Video
திருச்சியில் இந்திய திருநாட்டின் 74-வது குடியரசு தின விழா நேற்று வெகு உற்சாகத்துடனும், எழுச்சியுடனும் கொண்டாடப்பட்டது. இதனிடையே மனிதநேய இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் நேற்று இரவு திருச்சிராப்பள்ளி மாநகராட்சி 47-வது வார்டில் நடைபெற்ற குடியரசு தின விழாவின் போது இளைஞர்கள் மற்றும் பொதுமக்களின் வேண்டுகோளை ஏற்று, திருச்சி மாநகராட்சியின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாமன்ற உறுப்பினர் செந்தில்நாதன், திரைப்பட பாடலுக்கு இளைஞர்களுடன் சேர்ந்து உற்சாகமாக நடனம் ஆடினார். இது சமூக வலைதளங்களில் தற்போது அதிகம் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.
Last Updated : Feb 3, 2023, 8:39 PM IST