ETV Bharat / state

பா.ஜ.க ஆட்சியில் போலி மருத்துவம்! மருத்துவர்கள் சங்க ரவீந்திரநாத் தாக்கு! - IIT DIRECTOR KAMAKOTI COW URINE

அறிவியல் பூர்வமான கருத்திற்கு எதிராக கோமியம், பஞ்சகவ்யத்தை யார் பயன்படுத்தினாலும் அது தவறுதான் என சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரவீந்தரநாத் தெரிவித்தார்.

சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி (இடது), சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரவீந்தரநாத் (வலது)
சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி (இடது), சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரவீந்தரநாத் (வலது) (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 21, 2025, 6:57 PM IST

சென்னை: சென்னை ஐ.ஐ.டி., இயக்குநர் காமகோடி கோமியம், பஞ்சகவ்யம் ஆகியவை மனிதனுக்கு நோயெதிர்பு சக்தியை அதிகரிக்கும் என்றும், இதற்கான பல ஆய்வுகள் இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். இது சரிதான் என பா.ஜ.க., மூத்த தலைவர் மருத்துவர் தமிழிசை செளந்தரராஜனும், இந்திய ரயில்வே துறையில் பொறியாளராக பணியாற்றி ஓய்வு பெற்ற குப்பன் அவர்கள் எழுதிய பொறியியல் நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட பிறகு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இந்த சூழலில், அறிவியல் பூர்வமான கருத்திற்கு எதிராக கோமியம், பஞ்சகவ்யம் போன்றவற்றை யார் பயன்படுத்தினாலும் தவறு தான்; கேரளாவில் உள்ள கம்யூனிஸ்ட் பஞ்கவ்யத்தை பயன்படுத்த ஆதரித்தாலும் தவறுதான் என சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரவீந்தரநாத் தெரிவித்தார்.

அறிவியலுக்கு எதிரானது

தொடர்ந்து பேசிய அவர், கோமியம் குடித்தால் காய்ச்சல் குணமாகும் என்ற கருத்து மக்களுக்கும், அறிவியலுக்கும் எதிரானது எனவும், சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி தனது கருத்தை திரும்ப பெறாவிட்டால் அவருக்கு எதிராக போராட்டம் நடத்துவோம் எனவும் அவர் கூறியுள்ளார்.

மேலும், தமிழ்நாட்டில் ஏற்கனவே பல்வேறு வகையான காய்ச்சல்கள் உள்ளன. எல்லா வகை காய்ச்சல்களுமே சிகிச்சை மேற்கொள்ளாவிட்டால் அபாயகரமானது தான். வெளிக்காய்ச்சலோ, உள் காய்ச்சலோ எந்த காய்ச்சல் வந்தாலும் சரியான சிகிச்சை மேற்கொள்ளப்பட வேண்டும். அவ்வாறு சிகிச்சை செய்யாவிட்டால் ஆபத்தாகிவிடும் என்று எச்சரித்தார்.

இதையும் படிங்க: "பெரியார் சீர்திருத்தவாதி?.. சீமான் பேசியது தப்பே கிடையாது" - ஜான்பாண்டியன் கருத்து!

ஐஐடி இயக்குநராக இருக்கும் ஒருவர் காய்ச்சல் வந்தால் மருத்துவரை அணுகுங்கள், உரிய சிகிச்சை மேற்கொள்ளுங்கள் என்று சொல்லாமல் கோமியம் சாப்பிட்டால் காய்ச்சல் குணமாகி விடும் என்பது அறிவியலுக்கும், பொதுமக்களுக்கும் எதிரானது என்று கூறிய அவர், உயர் பதவியில் இருக்கக்கூடிய ஒருவர் சாதாரண மக்களுக்கு கோமியத்தை கொடுத்தால் 15 நிமிடத்தில் காய்ச்சல் சரியாக விடும் என தெரிவித்திருப்பதால், பொதுமக்கள் அதை உபயோகிப்பதற்கு வாய்ப்பு உள்ளது என வருத்தம் தெரிவித்தார்.

கோமியமும் காய்ச்சலும்

தொடர்ந்து பேசிய அவர், “மிகப்பெரிய அறிவியல் நிறுவனத்தை, சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி முறைகேடாக பயன்படுத்கிறார். பொது சுகாதாரத்தையும் மக்களையும் தவறாக வழிநடத்தும் ஐஐடி இயக்குநர் காமகோடி பதவி நீக்கம் செய்ய வேண்டும். காய்ச்சலில் இருப்பவர் கோமியம் குடித்தால் பொதுமக்களின் உயிருக்கே ஆபத்து ஏற்படும்.

கோமியம் குடித்தால் காய்ச்சல் சரியாகும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. பசுவின் சிறுநீரில் 14 வகையிலான நுண்ணுயிர்கள் (பாக்டிரியாக்கள்) உள்ளன. வயிற்றுப்போக்கு, சிறுநீரக பாதிப்பு ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது. பசு மாட்டின் சாணம் சாப்பிட்டால் சிறுநீர் பை தொற்று ஏற்படும். கிட்னியில் பாதிப்பு ஏற்படும் என்பதற்கான ஆதாரங்கள் உள்ளது.

பசு மாட்டின் சாணம் கிருமி நாசினி கிடையாது. நாடாப்புழு தொற்று ஏற்பட்டு மூளையில் பாதிப்பு ஏற்பட்டு வலிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. பசுமாட்டின் பாலை காய்ச்சாமல் குடித்தாலே காய்ச்சல் ஏற்படும் வாய்ப்பிருக்கும் நிலையில் ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியுள்ளது வேதனைக்குரியது.

போராட்டம் வெடிக்கும்

முன்னாள் பா.ஜ.க மக்களவை உறுப்பினர் பிரக்யாசிங் தாகூர், கோமியம் குடித்ததால் புற்றுநோய் சரியானது என பேட்டியளித்து விட்டு, அறிவியல் முறையில் சிகிச்சையளித்து குணமடைந்தது குறித்த ஆதராத்தை வெளியிட்டுள்ளார். இதுபோன்ற இந்துத்துவ அரசியலை ஒன்றிய அரசு மேற்கொள்கிறது.

இதையும் படிங்க: குப்பையான மெரினா: "காணும் பொங்கலுக்கு விடுமுறை கூடாது" - பசுமைத் தீர்ப்பாயம்

ஒரே தேசம், ஒரே மருத்துவமனை திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்காக இதுபோன்ற கருத்துகளை பேசி வருகிறார். பா.ஜ.க ஆட்சியில் இருக்கும் போதெல்லாம் போலி மருத்துவத்தை பரப்பி வருகின்றனர். ஐஐடி இயக்குநர் காமக்கொடியின் கருத்து தமிழ்நாட்டு மக்களுக்கும், அறிவியலுக்கும் எதிரானது.

எனவே அவரது கருத்தை திரும்ப பெற வேண்டும். திரும்ப பெறவில்லையெனில் அவருக்கும், அவருடைய கருத்துக்கும் எதிராக போராட்டத்தை நடத்துவோம்,” என்று தெரிவித்தார்.

கேரளாவில் மாட்டு சிறுநீர் மற்றும் சாணத்தில் தயாரிக்கப்பட்ட பஞ்சகவ்ய க்ரிதம் என்ற மருந்தை பயன்படுத்துவது குறித்த கேள்விக்கு, அறிவியலுக்கு புறம்பான கருத்துகளை யார் நம்பினாலும் அது தவறுத்தான்; கேரளா அரசாங்கம் செய்தாலும் அது தவறு தான் என்று கூறினார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.