சென்னை: 'லவ் டுடே' படத்தின் மூலம் நடிகராகவும் மக்களிடையே வரவேற்பு பெற்ற இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் ’டிராகன்’. ’ஓ மை கடவுளே’ பட இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்கியுள்ள இப்படத்தில் அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோஹர், கௌதம் மேனன், மிஷ்கின், கே.எஸ்.ரவிக்குமார் ஜார்ஜ் மரியம், வி.ஜே.சித்து, ஹர்ஷத் கான் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
‘டிராகன்’ திரைப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை (பிப்.21) திரையரங்குகளில் வெளியான டிராகன் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது.
முதல் வார இறுதியில் மூன்று நாட்களில் டிராகன் திரைப்படம் வசூல் செய்துள்ள தொகையை ஏஜிஎஸ் நிறுவனமே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பிப்ரவரி 21ஆம் தேதி வெளியான ‘டிராகன்’ படத்தை ஏஜிஎஸ் நிறுவனமே உலகமெங்கும் அந்நிறுவனமே விநியோகித்தது. முதல் நாளைக் காட்டிலும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் திரையரங்கில் கூட்டம் அதிகரித்தது.
#Dragon opening weekend 🔥🔥
— Archana Kalpathi (@archanakalpathi) February 24, 2025
Tamil Nadu : 24.9 Cr
AP/ Telangana : 6.25 Cr
Kerala / Karnataka/ North : 4.37Cr
Overseas: 14.7 Cr@pradeeponelife @Dir_Ashwath @aishkalpathi @Ags_production pic.twitter.com/mlulbS9DLg
இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி பகிர்ந்துள்ள எக்ஸ் தள பதிவில், ‘டிராகன்’ படம் முதல் மூன்று நாட்களில் உலக அளவில் ரூ.50.22 கோடி வரை வசூல் செய்துள்ளது. முதல் வார இறுதியில், தமிழகத்தில் மட்டும் 24.9 கோடி, ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் 6.25 கோடி, கேரளா, கர்நாடகா மற்றும் வட இந்தியாவில் ரூ.4.37 கோடி, வெளிநாடுகளில் ரூ.14.7 கோடியை வசூலித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
வெளியான நாளிலிருந்து வரவேற்பு அதிகரித்து வருவதால், 37 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம், முதல் மூன்று நாட்களிலேயே இலாபமீட்டியுள்ளது. 10 நாட்களுக்குள் 100 கோடி வரை வசூல் செய்யும் என வர்த்தகர்கள் கணித்துள்ளனர். இது பிரதீப் ரங்கநாதனின் முந்தைய படமான லவ் டூடேவை காட்டிலும் மிக அதிகம். அந்த படத்தின் மொத்த வசூலே 100 கோடிக்கும் குறைவுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
#DRAGON A beautiful movie. Excellent writing- hats off to @Dir_Ashwath . All characters have a beautiful and complete journey. @pradeeponelife showed us again that he’s a terrific entertainer and proved that he is a strong, soulful performer as well. @DirectorMysskin ,…
— Shankar Shanmugham (@shankarshanmugh) February 23, 2025
இதையும் படிங்க: ஒரு மாததிற்கு முன்பே ஓடிடியில் வெளியாகும் அஜித்தின் 'விடாமுயற்சி’
வசூல் ரீதியாக மட்டுமல்லாமல் விமர்சன ரீதியாகவும் பல்வேறு பாராட்டுகளை பெற்று வருகிறது ’டிராகன்’. தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர்களான ஷங்கர், நெல்சன் திலீப்குமார், லோகேஷ் கனகராஜ் என பலரும் டிராகன் திரைப்படத்தை பாராட்டி வருகின்றனர்.
இப்படத்தின் டிரெய்லர் வெளியான போது சிவகார்த்திகேயனின் ’டான்’ படத்தை போல இருப்பதாகவும், படிப்பு தேவையில்லை என்பது போல காட்சிகள் இருப்பதாகவும் விமர்சனத்திற்குள்ளானது. இந்நிலையில் டிராகன் திரைப்படத்திற்கும் டான் திரைப்படத்திற்கும் தொடர்பில்லை. இந்த படம் வேறு வகையில் நல்ல கருத்துகளை கூறுகிறது என ரசிகர்ள் கொண்டாடி வருகின்றனர்.
#Dragon what a fun blast 💥😍
— Nelson Dilipkumar (@Nelsondilpkumar) February 22, 2025
@pradeeponelife is the real fire🔥@Dir_Ashwath u made it so much fun and entertaining 💥💥 congrats entire cast and team @Ags_production @archanakalpathi @aishkalpathi for a blockbuster 💐💐
தவறான பாதையை தேர்ந்தெடுக்கும் ஒருவனுக்கு அந்தப் பாதை என்றும் நிலைக்காது என்பதை அழுத்தமாக சொல்லியிருக்கும் படமாக ’டிராகன்’ உள்ளது என இணையத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.