Video: பிறந்தநாளில் பழனி முருகனை குடும்பத்துடன் தரிசனம் செய்த நடிகர் கார்த்தி! - நடிகர் சிவக்குமார்
🎬 Watch Now: Feature Video
பழனி(திண்டுக்கல்): பிரபல திரைப்பட நடிகர் சிவகுமார் மற்றும் அவரது மகனும் நடிகருமான கார்த்தி ஆகியோர் இன்று பழனி முருகன் கோயிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தனர். நடிகர் சிவகுமார் தனது மனைவியுடன் மின் இழுவை ரயில் மூலம் மலைக்குச் சென்றார். அவரது மகனும் நடிகருமான கார்த்திக் படிப்பாதை வழியாக மலைக்கோயிலுக்கு வந்தார். காலையில் விஸ்வரூப அலங்காரத்தில் இருந்த முருகனை சிவகுமார் குடும்பத்தினர் தரிசனம் செய்தனர். அப்போது மலைக்கோயிலில் இருந்த பக்தர்கள் சிவகுமார் மற்றும் கார்த்தியுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இன்று நடிகர் கார்த்தி, தனது பிறந்தநாளை கொண்டாடுவதை ஒட்டி, குடும்பத்துடன் பழனி தண்டாயுதபாணி கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Last Updated : Feb 3, 2023, 8:23 PM IST