ஃபயர் கட்டிங்: முடிவெட்டும்போது இளைஞர் தலையில் பற்றி எரிந்த தீ.. - A young man suddenly caught fire in the craze of a New Year stylist haircut the video went viral on Social Media
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-16761667-thumbnail-3x2-a.jpg)
குஜராத் மாநிலத்தின் வல்சாத் மாவட்டத்தில் உள்ள வாபி என்ற பகுதியில் உள்ள சலூன் கடையில் 18 வயது இளைஞர் ஃபயர் ஹேர் கட் செய்துள்ளார். சலூன் கடைக்காரர் தலையில் ரசாயனத்தை தடவி ஃபயரை பற்ற வைத்தார். தலையில் நெருப்பை பற்ற வைத்த அடுத்த நொடியிலேயே சீப்பை வைத்து அதை அனைத்து ஹேர் ஸ்டைல் செய்ய முயற்சிக்க, நெருப்பு அணையாமல் வேகமாக பற்றத் தொடங்கியது. சூடு தாங்காமல் 18 வயது இளைஞர் துடித்துப்போய் துண்டால் நெருப்பை அணைக்க முயன்றார். அவருக்கு தீக்காயம் ஏற்பட்ட நிலையில், வல்சாத் மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Last Updated : Feb 3, 2023, 8:30 PM IST