மாணவர்களுடன் செல்ஃபி வீடியோ எடுத்து மகிழ்ந்த முதலமைச்சர்! - chennai latest news
🎬 Watch Now: Feature Video
டெல்லியில் குடியரசுத் தின விழா அணிவகுப்பில் அனுமதி மறுக்கப்பட்ட தமிழ்நாட்டின் ஊர்திகளை மெரினாவில் மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. அதை பள்ளி, கல்லூரி மாணவர்கள் பார்வையிட்டு வந்தனர். இந்நிலையில், தலைமை செயலகத்திற்கு அவ்வழியே சென்றுகொண்டிருந்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது வாகனத்தை நிறுத்தி, மாணவர்களுடன் கலந்துரையாடி, மிகுந்த மகிழ்ச்சியுடன் தனது செல்ஃபோனில் செல்ஃபி வீடியோ எடுத்துக்கொண்டார்.
Last Updated : Feb 3, 2023, 8:17 PM IST