திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் பகுதியில் புழல் ஏரியின் மதகு அருகே சுமார் 100-க்கும் மேற்பட்டோர் தினமும் காலை மாலை என இருவேளைகளிலும் நடைப்பயிற்சி மேற்கொண்டுவருகின்றனர்.
கரோனா தொற்றுக்காலத்தில் வீட்டில் முடங்கியிருந்த அனைவருக்கும் நடைப்பயிற்சியும், உடற்பயிற்சியும் அவசியம் என்பதை ஊக்குவிக்கும் வகையில் செங்குன்றம் புழலேரி நடைபயில்வோர் சங்கம் சார்பாக செயற்குழு உறுப்பினர் யூசப் கான் ஏற்பாட்டில் புழல் ஏரி பகுதியில் விலையில்லா முட்டை, தண்ணீர் பாட்டில் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் செங்குன்றம் புழலேரி நடைபயிலும் சங்கத்தின் தலைவர் இரா. பாபு, செயலாளர் பவானி சங்கர், செல்வகுமார் உள்ளிட்ட சங்கத்தின் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
மேலும், வாரத்தில் ஒருநாள் புதன்கிழமைதோறும் சங்க உறுப்பினர்கள் தங்களது சொந்த செலவில் நடைபயில்வோருக்கு ஏதாவது ஒரு ஊட்டச்சத்து பொருளை வழங்குகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.