புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாநகராட்சி மேயர் திலகவதி - புதுக்கோட்டை மாநகர செயலாளர் செந்தில் ஆகியோர் மகனும், புதுக்கோட்டை மாநகர இளைஞரணி அமைப்பாளருமான கணேஷ், கஸ்தூரி ரத்னாவிற்கும் நேற்று புதுக்கோட்டையில் திருமண வரவேற்பு விழா நடைபெற்றது.
நிகழ்ச்சியில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். இதையடுத்து, அதே மேடையில் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜாவின் தந்தை வைரக்கண்ணு மற்றும் புதுக்கோட்டை வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் ஸ்டாலின் நாராயணசாமி ஆகியோர் திருவுருவ பட திறப்பு விழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மேடையில் பேசினார். அப்போது பேசிய அவர், “எனது குடும்பத்தில் நடக்கும் திருமண விழாவில் ஏற்படும் மகிழ்ச்சி எப்படியோ அதே உணர்வோடு தான் இந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளேன்.
புதுக்கோட்டை வடக்கு மாவட்ட @dmk_youthwing துணை அமைப்பாளராகவும், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினராகவும் திறம்பட பணியாற்றிய அன்புச்சகோதரர் கந்தவர்கோட்டை நா.ஸ்டாலின் சில மாதங்கள் முன்பு மரணமடைந்தார்.
— Udhay (@Udhaystalin) February 9, 2025
நம்மை விட்டு மறைந்த சகோதரர் ஸ்டாலினின் திருவுருவப்படத்தை புதுக்கோட்டையில் இன்று… pic.twitter.com/AFopHVkVZz
இங்கு இருக்கின்றவர்களின் முகங்கள் மலர்ச்சியாக இருக்க திராவிட மாடல் அரசின் சாதனைகளும், தமிழ்நாடு முதலமைச்சரின் சாதனைகளும் தான் காரணம். மகளிர்க்கு பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு முதலமைச்சர் தந்துள்ளார். இலவச பேருந்து பயணம், புதுமைப் பெண்கள் திட்டம், மாணவர்களுக்கான தமிழ் புதல்வன் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதில் புதுமைப்பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம் மூலம் 8 லட்சம் மாணவ, மாணவிகள் பயன் பெறுகின்றனர். எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் காலை உணவு திட்டம் கொண்டு வந்துள்ளார்.
தகுதி உள்ள அனைத்து மகளிருக்கும் கலைஞரின் மகளிர் உரிமைத் தொகை திட்டம் விரிவுபடுத்தப்படும் என்று சட்டமன்றத்தில் உறுதி கொடுத்துள்ளேன். மத்திய அரசு பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு ஒரு ரூபாய் கூட நிதி ஒதுக்கவில்லை. தமிழ்நாடு என்ற பெயர் கூட இடம் பெறவில்லை. அதனால், பாஜகவுக்கும், பாஜகவுக்கு ஆதரவாக இருக்கும் அதிமுகவுக்கும் பாடம் கற்பிக்கும் வகையில் 2024ஆம் ஆண்டு தேர்தல் வெற்றியை போல் மீண்டும் திமுகவை 2026-இல் வெற்றி பெற செய்ய வேண்டும்.
புதுக்கோட்டை தொகுதியின் கழக சட்டமன்ற உறுப்பினர் , கழக அமைப்பு சாரா ஓட்டுநர் அணியின் மாநில துணைச் செயலாளர் சகோதரர் @Muthuraja_MLA அவர்களுடைய தந்தையார் திரு.கா.வைரக்கண்ணு அவர்கள் அண்மையில் மறைந்தார்.
— Udhay (@Udhaystalin) February 9, 2025
இந்நிலையில், புதுக்கோட்டைக்கு இன்று சென்ற போது மறைந்த திரு.வைரக்கண்ணு அவர்களின்… pic.twitter.com/BgcoR01tLk
இதையும் படிங்க: "அதிமுக கொண்டு வந்த திட்டங்களில் திமுக ஸ்டிக்கர் ஒட்டுகிறது" - எடப்பாடி பழனிசாமி ஆவேசம்!
நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து 2026-இல் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி, திமுக தலைமையிலான கூட்டணியை வெற்றி பெற செய்து, இரண்டாவது முறையாக தமிழ்நாடு முதலமைச்சராக மு.க ஸ்டாலினையும், ஏழாவது முறையாக திமுக ஆட்சியை கொண்டுவர வேண்டும். இல்லறம் ஏற்கப் போகும் தம்பதியர் தங்களுக்கு பிறக்கப் போகும் குழந்தைக்கு அழகான தமிழ் பெயர் சூட்ட வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்.
பெரியாரும், பகுத்தறிவும் போல அண்ணாவும், மாநில சுயாட்சியும் போல கலைஞரும், திராவிட முன்னேற்றக் கழகமும் போல மு.க ஸ்டாலினும், உழைப்பும் போல புதுமண தம்பதி இணைந்து வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறேன்” என்றார்.