பெட்ரோல் குண்டு வீசிய இருவர் மீது குண்டர் சட்டம் பதிவு - கிருஷ்ணகிரியில் பெட்ரோல் குண்டு
கிருஷ்ணகிரி: ஓசூரில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய இருவர் குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அப்துல்கலாம் குடியிருப்புப் பகுதியில் வசித்துவரும் அக்பர் பாஷா என்பவரது வீட்டின் மீது ஜூன் 24ஆம் தேதி இரவு மதுபோதையில் சிலர் பெட்ரோல் குண்டு வீசினர். அதில் இருவர் காயமடைந்தனர்.
அந்தச் சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு பர்கத், நவாஸ் ஆகிய இருவரை கைதுசெய்தனர். இந்த நிலையில் அவர்கள் இருவருக்கும் மாவட்ட எஸ்.பி. பாண்டி கங்காதர் பரிந்துரையின்படி ஆட்சியர் பிரபாகர் குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டார். அதன்படி அவர் மீது வழக்குப் பதியப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதையும் படிங்க: நள்ளிரவில் பெட்ரோல் திருடும் இளைஞர்கள்: வைரலாகும் சிசிடிவி காட்சி!