சென்னை: ’ஜெயிலர் 2’ படப்பிடிப்பு வரும் மார்ச் மாதம் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த், விநாயகன், சிவராஜ்குமார், மோகன்லால், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்த திரைப்படம் 'ஜெயிலர்'. இத்திரைப்படம் உலக அளவில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. பாக்ஸ் ஆபிஸில் 600 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.
அனிருத் இசையமைப்பில் இப்படத்தில் காவாலா, ஹுகும் ஆகிய பாடல்கள் மெகா ஹிட்டானது. ஜெயிலர் படத்தில் ரஜினி ஸ்டைலுடன், நெல்சனின் காமெடியும் சேர்த்து மாஸ் கமர்ஷியலாக அமைந்ததால் சினிமா ரசிகர்களால் பெரிதும் விரும்பப்பட்டது. இதனைத்தொடர்ந்து டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ’வேட்டையன்’ திரைப்படம் கடந்த அக்டோபர் மாதம் வெளியானது.
வேட்டையன் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், தற்போது ரஜினிகாந்த் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ’கூலி’ படத்தில் நடித்து வருகிறார். கூலி திரைப்படம் அடுத்த ஆண்டு மே மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கூலி அப்டேட் மற்றும் ’ஜெயிலர் 2’ படத்தின் ப்ரோமோ வீடியோ கடந்த 12ஆம் தேதி ரஜினிகாந்த் பிறந்தநாளுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.
#Jailer2 Shooting expected to Begin from March 2025. Nelson & Team has started the location hunt for the movie in Coimbatore & Kerala🎥
— AmuthaBharathi (@CinemaWithAB) December 21, 2024
In the meantime Superstar #Rajinikanth will wrap up #Coolie✅
The promo shoot of Jailer2 is completed & expected to release on January😎🔥 pic.twitter.com/QPItMtQ5hZ
ஆனால் கூலி படத்தின் அப்டேட் மட்டுமே வெளியான நிலையில், ஜெயிலர் 2 படத்தின் அப்டேட் குறித்து ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். இந்நிலையில் அதுகுறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. ஜெயிலர் 2 படத்தின் ப்ரோமோ படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும், வரும் புத்தாண்டு அல்லது பொங்கல் பண்டிகை ஸ்பெஷலாக ப்ரோமோ வெளியாகலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் டபுள் எவிக்ஷன்?... வெளியேறிய முதல் போட்டியாளர் யார் தெரியுமா? - BIGG BOSS 8 TAMIL
மேலும் ரஜினிகாந்த் கூலி படத்தின் படப்பிடிப்பை வரும் ஜனவரி மாதத்துடன் முடித்து கொண்டு, மார்ச் மாதத்தில் இருந்து ஜெயிலர் 2 படப்பிடிப்பில் பங்கேற்பார் எனவும் கூறப்படுகிறது. ரஜினி, நெல்சன் வெற்றிக் கூட்டணியில் தயாராகவுள்ள ஜெயிலர் 2 படத்தின் ப்ரோமோவை காண ரஜினி ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். வரும் 2025ஆம் ஆண்டு ரஜினி, விஜய், அஜித் என முன்னணி நடிகர்கள் அனைவரது படங்களும் திரைக்கு வருவது குறிப்பிடத்தக்கது.