கரோனா பாதிப்புகளைக் கட்டுப்படுத்த கோவேக்சின், கோவிஷீல்டு என்ற பெயரில் உள்நாட்டில் தடுப்பு மருந்துகள் கண்டறியப்பட்டு உள்ளன. அவசரகால தேவைக்காக தடுப்பூசிகளைப் போட மத்திய அரசும் அனுமதி வழங்கியுள்ளது.
இதன்படி கரோனா தடுப்பூசி போடும் பணிகள் கடந்த ஜனவரி 16ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன. உள்நாட்டு தேவை போக கரோனா தடுப்பூசிகள் மற்ற நாடுகளுக்கும் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி ஜமைக்கா உள்ளிட்ட கரீபியன் தீவு நாடுகளுக்கும் கரோனா தடுப்பூசிகள், தேவையின் அடிப்படையில் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், ஜமைக்கா நாட்டுக்கு கரோனா தடுப்பூசிகளை வழங்கியதற்காக வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கெயில் இந்தியாவிற்கு நன்றி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள காணொலியில், “பிரதமர், இந்தியத் தூதரகம் , இந்திய மக்கள் என அனைவருக்கும் நன்றி. ஜமைக்காவிற்கு கரோனா தடுப்பூசிகளை வழங்கிய உங்கள் அனைவருக்கும் என் உளமாற நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.
இதையும் படிங்க...‘இனி உன்ன இந்த ஏரியா பக்கமே பார்க்கக் கூடாது’ - சாஹலை வறுத்தெடுத்த கிறிஸ் கெயில்!