இந்தியாவின் கண்காணிப்பு குவாட்காப்டரை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான்! - பாகிஸ்தான் ராணுவம்
இஸ்லாமாபாத்: இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே உள்ள வான்வெளிக் கட்டுப்பாட்டை மீறியதாக இந்தியாவின் கண்காணிப்பு குவாட்காப்டரை பாகிஸ்தான் ராணுவம் சுட்டு வீழ்த்தியதாக தெரிவித்துள்ளது.
pak-army-claims-to-shoot-down-indian-spying-quadcopter-along-loc
இதுகுறித்து பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், '' இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே போடப்பட்டுள்ள எல்லைப் பாதுகாப்பு ஒப்பந்தத்தை இச்செயல் மீறியுள்ளது.
கண்காணிப்பதற்காக பயன்படுத்தப்படும் இந்தியாவின் குவாட்காப்டர் பாகிஸ்தான் எல்லைக்குள் 200 மீ புகுந்தது. இதையடுத்து அந்த குவாட்காப்டரை பாகிஸ்தான் ராணுவம் சுட்டு வீழ்த்தியது.
இந்த ஆண்டில் பாகிஸ்தான் ராணுவத்தால் சுட்டு வீழ்த்தப்படும் 10ஆவது குவாட்ஹாப்டர் இது'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இந்திய-சீன எல்லை விவகாரம்: அடுத்த வாரத்தில் 5ஆம் கட்ட பேச்சுவார்த்தை!