ETV Bharat / international

அமெரிக்க அதிபர் தேர்தலில் தலையிட ஹேக்கர்கள் முயற்சியா?... மைக்ரோசாப்ட் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்! - அமரிக்க அதிபர் தேர்தலில் தலையிட ஈரான் ஹேக்கர்கள் முயற்சி

வாஷிங்டன்: 2020ஆம் ஆண்டு நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் தலையிடும் நோக்கில் நூற்றுக்கணக்கான மின்னஞ்சல் கணக்குகளின் மீது ஈரான் ஹேக்கர்கள் சைபர் தாக்குதல் நடத்தியுள்ளதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.

hackers
author img

By

Published : Oct 6, 2019, 4:51 AM IST

அமெரிக்காவில் அடுத்தாண்டு நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் போட்டியிட அதிபர் டொனால்டு ட்ரம்ப், முக்கிய அரசியல் தலைவர்கள் ஆகியோர் பரப்புரை மேற்கொண்டுவருகின்றனர்.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் தேர்தல் பரப்புரைக்குத் தொடர்புடைய 200 மின்னஞ்சல் கணக்குகளை, ஹேக்கர்கள் சைபர் தாக்குதல் நடத்தியுள்ளதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.

இது குறித்து மைக்ரோசாப்ட் வெளியிட்டிருந்த அறிக்கையில், "ஈரான் அரசோடு தொடர்புடையதாகக் கருதப்படும் ஃபாஸ்போரஸ் (Phosphorus) என்ற ஹேக்கர்ஸ் கும்பல் கடந்த ஆகஸ்ட், செப்டம்பர் ஆகிய மாதங்களில் 2700 மின்னஞ்சல் கணக்குகளின் முகவரிகளை கண்டறிய முயன்றுள்ளது.

214 மின்னஞ்சல் கணக்குகள் மீது சைபர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில், அமெரிக்க முன்னாள் அலுவலர்கள், உலக அரசியலை உற்றுநோக்கும் பத்திரிகையாளர்கள், வெளிநாடு வாழ் ஈரானியர்கள் ஆகியோரின் மின்னஞ்சல் கணக்குகளும், அரசியில்வாதி ஒருவரின் தேர்தல் பரப்புரைக்குத் தொடர்புடைய மின்னஞ்சல் கணக்குகளும் அடக்கம்" எனக் கூறப்பட்டுள்ளது.

ஏற்கனவே, அதிபர் ட்ரம்ப்பின் உக்ரைன் உரையாடல் சர்ச்சை பூதாகரமாக வெடித்துள்ளநிலையில், மைக்ரோசாப்ட்டின் இந்தத் தகவல் அமெரிக்கர்களை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இதையும் படிங்க: ட்ரம்ப் சர்ச்சை உரையாடல்: உக்ரைனுக்கான அமெரிக்கத் தூதர் பதவி விலகல்

Intro:Body:

Iranian hackers targeted US 2020 campaign, says Microsoft


Conclusion:

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.