ETV Bharat / state

பாஜக தலைவர்களுக்கு கோமியத்தை அனுப்ப முயற்சி...தடுத்து நிறுத்திய போலீசார்! - PROTEST TO SEND COW URINE

ஐஐடி இயக்குனர் பாஜகவின் தமிழிசை செளந்தரராஜன் வானதி சீனிவாசன் ஆகியோருக்கு எதிர்ப்பு தெரிவித்து நெல்லையில் மாட்டு கோமியத்தை தபாலில் அனுப்ப முயன்ற திராவிடத் தமிழர் கட்சியினர் தடுத்த நிறுத்தப்பட்டனர்

திராவிடத் தமிழர் கட்சியினர்
திராவிடத் தமிழர் கட்சியினர் (Image credits-Etv Bharat Tamilnadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 24, 2025, 7:59 PM IST

நெல்லை: ஐஐடி இயக்குனர் பாஜகவின் தமிழிசை செளந்தரராஜன் வானதி சீனிவாசன் ஆகியோருக்கு எதிர்ப்பு தெரிவித்து நெல்லையில் மாட்டு கோமியத்தை தபாலில் அனுப்ப முயன்ற திராவிடத் தமிழர் கட்சியினர் தடுத்த நிறுத்தப்பட்டனர்

சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது மாட்டு கோமியம் மருத்துவ குணம் கொண்டது எனவும் அதில் 80 வகையான நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதாகவும் பேசியது பெரும் சர்ச்சை ஏற்படுத்தியது. அவரது பேச்சுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர் அதேசமயம் ஐஐடி இயக்குனருக்கு ஆதரவாக பாஜக சேர்ந்த தமிழிசை சௌந்தரராஜன் வானதி சீனிவாசன் போன்ற தலைவர்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இதுபோன்ற நிலையில் ஐஐடி இயக்குனரின் பேச்சை கண்டிக்கும் வகையிலும் அவருக்கு ஆதரவு தெரிவிப்போருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும் இன்று நெல்லை மாவட்ட திராவிட தமிழர் கட்சி சார்பில் நூதனப் போராட்டம் நடத்தப்பட்டது.

ஐஐடி இயக்குனர் காமகோடி, பாஜகவை சேர்ந்த தமிழிசை சௌந்தர்ராஜன், வானதி சீனிவாசன் ஆகியோருக்கு மாட்டு கோமியத்தை தபாலில் அனுப்பும் போராட்டம் நடைபெற்றது. கொக்கிரகுளம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள தபால் அலுவலகத்தில் மாட்டு கோமியத்தை அனுப்புவதற்காக பாக்கெட்டில் கோமியத்தை எடுத்து வந்த திராவிட தமிழர் கட்சியினரை அங்கிருந்த போலீசார் தடுத்து நிறுத்தினர்.

மேலும் அவர்கள் வைத்திருந்த மாட்டு கோமியத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய திராவிட தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் கரு முகிலன்,"கோமியத்தில் மருத்துவ குணம் இருப்பதாக யாரும் நிரூபிக்கவில்லை. எனவே ஐஐடி இயக்குனரின் பேச்சை கண்டித்தும் அவருக்கு ஆதரவு தெரிவித்த பாஜக நிர்வாகிகளுக்கும் கோமியத்தை தபாலில் அனுப்ப வந்தோம் அடுத்த கட்டமாக நேரடியாக அவர்களின் வீடுகளுக்கே சென்று மாட்டு கோமியத்தை வழங்கும் போராட்டத்தை நடத்துவோம்,"என கூறினார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.